உலக அளவில் மிகப்பெரிய தொழிலதிபர்களில் ஒருவராக இருந்து வருபவர் எலன் மஸ்க். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் இவர், உலகில் நடக்கும் விஷயங்களை பற்றி கலாய்க்கும் வகையிலும்,
சர்ச்சையை கிளப்பும் வகையிலும் தொடர்ந்து பதிவு செய்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அண்மையில் ஆப்பிள் நிறுவனத்தை கலாய்த்து தனது X வலைதள பக்கத்தில் ட்வீட் போட்டுள்ளார்.

அந்த பதிவிற்க்கு தப்பாட்டம் என்ற தமிழ் திரைப்படத்தின் காட்சியை பயன்படுத்தி உள்ளார். இதற்கு அந்த படத்தின் நடிகரும் – தயாரிப்பாளருமான துரை. சுதாகர் நன்றி தெரிவித்துள்ளார்.

தான் நடித்த திரைப்படத்தின் காட்சியை பயன்படுத்தியதற்கு எலன் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.