விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.
மேற்குவங்கத்தைச் சேர்ந்த விவேகானந்தருக்கு ஹீரோ போன்று வரவேற்பு அளித்த தமிழ்நாடு மக்கள் என விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற ராமகிருஷ்ணா மடத்தின் 125 வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த புதிய முனையத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், ராமகிருஷ்ணா மடம் தொடங்கி 125 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விவேகானந்தர் பற்றிய பேசிய அவர், அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய விவேகானந்தர் முதன்முதலில் தமிழகத்திற்குத் தான் வந்தார். மேற்குவங்கத்தைச் சேர்ந்த விவேகானந்தருக்கு ஹீரோ போன்று வரவேற்பு அளித்த தமிழ்நாடு மக்கள் என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். ஒரே பாரதம் குறித்து நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் தெளிவாக இருந்ததாக குறிப்பிட்டார். கன்னியாகுமரியில் இருக்கும் விவேகானந்தர் பாறை மிகவும் புகழ்பெற்றது என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய பிரதமர், ”தமிழ் மொழியையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் நேசிக்கிறேன்” என்று கூறியுள்ளார். குறிப்பாகச் சென்னை அவருக்கு உத்வேகம் அளிப்பதாகக் கூறியுள்ளார். மேலும் காசி தமிழ்ச்சங்கமம் பற்றி பெருமை கொண்டார். சவுராஷ்ராவில் தமிழ்ச்சங்கமம் நடத்துவது பெருமைக்குரியதாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.