- பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கக்கூடிய அரசாணை 243 ஐ ரத்து செய்திட கோரி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் டிட்டோ ஜாக் அமைப்பினர் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்:
பேட்டி: எழிலரசன் – மாநில தலைவர் – டிட்டோ ஜாக்தஞ்சையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்,தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்அரசாணை 243 ஐ ரத்து செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசாணை 243 னால் பெண் ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர், பணி இடமாறுதலில் தஞ்சை பெண் ஆசிரியரை கன்னியாகுமரிக்கு மாறுதல் செய்தால் அவரால் எப்படி பணிசெய்ய முடியும் எனவேதான் அரசாணை 243 ஐ ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறோம்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்றும் தேர்தல் கால வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்றவேண்டும்.
தமிழக அரசு கோரிக்கைகளை நிறைவேற்றிட பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் இல்லை என்றால் வரும் 29 ம் தேதி, 30 ம் தேதி, 1 ம் தேதி ஆகிய 3 நாட்களும் சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர்.