இன்று மார்ச் 1 ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71-வது பிறந்த நாள். தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், 1 மார்ச் 1953-ல் பிறந்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் 3-வது மகனான ஸ்டாலின் கருணாநிதி தயாளு அம்மாளுக்கு மகனாகப் பிறந்தவர். 1953-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி சென்னையில் உள்ள மருத்துவமனையில் ஸ்டாலின் பிறந்தார்.

ஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் மரணம் அடைந்தார். அவர் தனது குழந்தைக்கு ஸ்டாலின் பெயரை வைத்தார்.
சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, மொழிப்பற்று, இன உரிமை, மாநில சுயாட்சி போன்ற கருத்தியல்களின் அடித்தளத்தில் நின்று தமிழ்நாட்டை வழி நடத்தி கொண்டிருப்பவர் ‘திராவிட நாயகர்’ முதல்வர் ஸ்டாலின் என திமுக ஐடிவிங் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அப்போது தடுமாறிக்கொண்டு இருந்த தமிழ்நாட்டை மீண்டும் தலை நிமிர செய்த தலைமகன் என பல இடங்களிலும் சுவரொட்டிகள், பதாகைகள் வைக்கப்பட்டு இனிப்புகள் கொடுத்து திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். பல இடங்களில் சிறப்பு கூட்டங்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று தமிழகத்தில் பெரும்பான்மையான இடங்களை பிடித்து வெற்றி பெற்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கிறார் முக ஸ்டாலின். இவரது பிண்ணனியை கவனித்தால், ஸ்டாலின் அனுபவித்து கடந்து வந்தது எல்லாமே அவமானங்களும், தொடர் தோல்விகளும் நிறைந்த வாழ்வு தான்.

தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இல்லாத திமுகவால் இனிமேல் ஆட்சியை பிடிக்க முடியாது. இதனால் ஸ்டாலினுக்கு முதல்வராகும் ராசியில்லை. ஸ்டாலின் ஜாதகத்தில் முதல்வராவதற்கான வாய்ப்பு கிடையவே கிடையாது.
கருணாநிதி இருக்கும் போதே மகனுக்காக முதல்வர் பதவியை விட்டு கொடுத்திருக்கலாம் என்ற சலசலப்புக்களை எல்லா காலத்திலும் கேட்டே வாழ்க்கையை நகர்த்தியவர். ஸ்டாலின் 1967ல் இருந்து தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.

கடந்த 1996-ல் முதன்முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதுடன் சென்னை மேயராகவும் பதவி வகித்தார். 2006-ல் திமுக ஆட்சியை பிடித்த போது, அமைச்சரவையில் இடம் பிடித்தார்.
திமுக தலைவர் கருணாநிதிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வீல் சேரில் அமரும் நிலை ஏற்பட்ட போதும் முதல்வர் பதவி ஸ்டாலினுக்கு கிட்டவில்லை. துணை முதல்வராக மட்டுமே அவரால் பொறுப்பேற்க முடிந்தது.

கடந்த 2016-ல் தேர்தலின் போது, மு.க ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற நிலையும் மாறியது. ஆனால் ஸ்டாலின் அதிலும் சிரமேற் கொண்டு பிரச்சார பொறுப்பை ஏற்று கொண்டு தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்தார். மு.க ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக செயல்பட்டார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதிக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க மனமில்லை என நேரிடையாகவே ஸ்டாலினை விமர்சித்ததெல்லாம் கால தேவன் ஸ்டாலினின் மனசாட்சியை அவமானத்திற்குள்ளாக்கிய தருணங்கள்.

கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்திலும் அவருக்கு முதலமைச்சராகும் ராசி இல்லை என எடப்பாடி வெளிப்படையாகவே விமர்சனம் செய்தார்.
எடப்பாடி, ஜெயக்குமார், ஹெச்.ராஜா என கிட்டத்தட்ட எதிர்கட்சிகள் அனைத்துமே ஒன்று சேர்ந்து, ஸ்டாலினுக்கு முதல்வர் ஆவதற்கான வாய்ப்பும், தகுதியும், அதிர்ஷ்டமும் கிடையாது என்று தான் இந்த தேர்தலில் தொடர் பிரச்சாரம் செய்து வந்தனர். ஆனால், மக்களின் தீர்ப்பு வேறு மாதிரியாக இருந்தது.

ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத இந்த சூழலில் சரியான வியூகம் வகுத்து சிறப்பான கூட்டணியுடன் களமிறங்கி தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்து நம்மை சுற்றி இருக்கும் சூழல்கள், ஜோதிடம், ராசியை விட விடா முயற்சிக்கே வெற்றி என்பதை நிரூபித்து திமுக தனியாக 125 இடங்களில் வெற்றி பெற்று பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலிலேயே ஸ்டாலின் தலைமையில் தேர்தலைச் சந்தித்த தி.மு.க. ஒரு இடத்தை மட்டுமே அதிமுகவுக்கு விட்டுக் கொடுத்து மொத்த இடத்தையும் தன் வசப்படுத்தியது. அப்போது சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

திமுகவின் வரலாற்றில், இது வரையில் கருணாநிதி கூட இந்த வெற்றியை ருசித்ததில்லை. தனியொருவனாக ஸ்டாலின் நல்ல தலைவராகவும் சாதித்து காட்டியிருக்கிறார்.
திமுகவுக்கு வோட்டு போட்டவர்கள், போடாதவர்கள் என பாரபட்சமில்லாமல் அனைவரிடமுமே ஸ்டாலின் பதவியேற்றது குறித்து ஒரு பெருமிதம் தமிழகத்தில் இருந்தது நிஜம்.

நல்ல ஆட்சியைத் தன்னால் தர முடியும் என்பதற்கான சான்றாக, பதவியேற்ற முதல் நாளே, நேர்மையான அதிகாரிகளைத் தேடித்தேடி தன் பக்கம் வைத்துக் கொண்டு, வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கியிருக்கிறார் ஸ்டாலின்.
அதேபோல் சூழ்ந்திருக்கும் பொருளாதார சிக்கல்கள், காலியான கஜானா, மூச்சு விடுவதற்கே சுத்தமான காற்றில்லாமல் திணறிக் கொண்டிருக்கும் பொதுமக்கள், எதிர்த்து நின்ற மத்திய அரசின் சவால்கள் அனைத்தையும் தம்முடைய விடாமுயற்சியின் மூலம் சமாளித்து தமிழகத்தை மீட்டெடுப்பார்.

வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காப்பாற்றுவார் என்பதே கடைக்கோடி தமிழனின் கண்ணீர் வாசகம். இனி தமிழகத்தைச் சூழ்ந்திருக்கும் இருள், இந்த சூரியனின் வெளிச்சத்தில் கரைந்து காணாமல் போகட்டும். விடியட்டும் தமிழகம் ஸ்டாலின் விடியலைத் தரட்டும்.