மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் : நன்றி தெரிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

3 Min Read
  • தமிழகம் முழுவதும் உள்ள ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பட்டுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகள் 200க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு விளம்பர பதாகைகளை கைகளில் ஏந்தி பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் – உரிமைகளையும், கோரிக்கைகளையும் நேரடியாக மாற்றுத்திறனாளிகளே கேட்டு பெறமுடியும் – மற்றவர்கள் தலையீடு இருக்காது.

- Advertisement -
Ad imageAd image

பேட்டிகள்.
1. ஜலீல்முகைதீன் – மாற்றுத்திறனாளி, மல்லிப்பட்டினம்
2. வழக்கறிஞர் செல்வராசு – சங்கத்தின் மாநில சட்ட ஆலோசகர்

வருவாய்த்துறையின் அரசாணை எண் 300-ல் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாநில அளவில் வருவாய் ஆணையர் தலைமையிலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையிலும்,  மாதந்தோறும் கோட்ட அளவில் கோட்டாட்சியர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்காக நடத்தப்படும் கூட்டங்களில் சங்கப் பிரதிநிதிகளாக மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்களும் பொறுப்பாளராக உள்ளார்கள், அவர்கள் இக்கூட்டங்களில் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அதிகாரிகளிடம் தேவையற்ற வாதங்களில் ஈடுபட்டு கூட்டம் நடத்த பிறப்பிக்கப்பட்ட நோக்கத்தை மாற்றி விடுகிறார்கள்.

இதனால் இக்கூட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் சங்க பிரதிநிதிகளாக இருந்தால் அவர்கள் கலந்து கொள்ளாத வகையில் அரசாணையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து அரசாணை எண் 300ல் தற்போது திருத்தம் கொண்டு வரப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்த உத்தரவில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் சங்கப் பிரதிநிதிகளாக உள்ள மாற்றுத்திறனாளிகள் அல்லாத நபர்கள் கலந்து கொள்ள தடை விதைத்து அனைத்து மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகளின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது. இந்த உத்தரவை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் இன்று மாலை பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம் வட்டங்களைச் சேர்ந்த 80 பெண் மாற்றுத்திறனாளிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்று திரண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர். முதலில் பட்டுக்கோட்டையின் இதயப்பகுதியான மணிக்கூண்டு பகுதியில் ஒன்று திரண்ட 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் அரசாணை எண் 300 ல் திருத்தம் கொண்டு வந்து உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து விளம்பர பதாகைகளை தங்களது கைகளில் ஏந்தி நன்றி தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.

கொஞ்சம் இதையும் படிங்க :  https://thenewscollect.com/dr-kovi-chezhiyan-who-will-take-over-as-the-minister-of-higher-education-and-visit-his-constituency-an-enthusiastic-welcome-surrounded-by-more-than-a-hundred-volunteers/

அதனைத் தொடர்ந்து இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தனர். அதனைத் தொடர்ந்து சாலையில் செல்லக்கூடிய பாதசாரிகள், பொதுமக்கள், வியாபாரிகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்து மாற்றுத்திறனாளிகள் கூறுகையில், இந்த திருத்தம் செய்யப்பட்ட அரசு உத்தரவின்பேரில் தமிழகத்தில் உள்ள ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகளும் தங்களுடைய உரிமைகளையும், கோரிக்கைகளையும் நேரடியாக மாற்றுத்திறனாளிகளே கேட்டு பெறமுடியும். மற்றவர்கள் தலையீடு இருக்காது. இதனால் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய ஒட்டு மொத்த மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Share This Article
Leave a review