தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் இன்று பல்கலைக்கழக வழக்கத்தில் தேசிய மாணவர் படை துணை இயக்குனர் வழங்கினார்.
தேசிய மாணவர் படை சார்பாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமிக்கு கௌரவ கர்னல் பதவி சின்னம் வழங்கும் விழா இன்று பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதன் இணைப்பு, மற்றும் உறுப்பு கல்லூரிகளில் தேசிய மாணவர் படையில் துணை வேந்தர் முனைவர் கீதாலட்சுமி ஆற்றிய தொண்டை போற்றும் விதமாக இந்த விழா நடைபெற்றது.
அதில் சிறப்பு விருந்தினராக தேசிய மாணவர் படையின் துணை இயக்குனர் காமடோர் அதுல் குமார் ரஸ்தோகி கலந்து கொண்டு கௌரவ பதவி சின்னத்தை துணை வேந்தர் கீதாலட்சுமிக்கு வழங்கினார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி கூறுகையில்;- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 14 ஆம் ஆண்டு துணைவேந்தராக நான் இந்த பெருமையை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த பதவியை பெரும் நான்காவது துணைவேந்தராக நான் உள்ளதாகவும், மேலும் இந்தியாவிலேயே அதிக கவுரவ பதவி சின்னத்தை பெரும் முதல் பெண்ணாக நான் இருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த பதவிக்கு ஏற்ப தன்னால் இந்திய மாணவர்களுக்கு என்னென்ன நற்பண்புகளை பறைசாற்ற முடியுமோ நிச்சயம் அதை அவர்களுக்காக செய்வேன் என்று உறுதி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் முனைவர் மரகதம், வேளாண்மை பல்கலைக்கழக தேசிய மாணவர் படை அதிகாரிகள், மற்றும் முனைவர்கள் மனோன்மணி, சந்தோஷ் பட்டேல், என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.