கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஆறாவது மலர் கண்காட்சி துவங்கியது. அப்போது 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை மாண்புமிகு தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களை பல்கலைகழக தாவரவியல் பூங்காவை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
அப்போது சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மலர் கண்காட்சியில் பல்வேறு விதமான மலர்கள் மற்றும் சிறுதானியங்களை கொண்டு செய்யப்பட்ட வடிவங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

அதன் குறிப்பாக இந்த மலர் கண்காட்சியில் பெரிய மலர் கூடையில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர், சிறுதானியங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள சதுரங்கம், தமிழர் பண்பாட்டை பறைசாற்றும் வகையில் மலர்களால் வடிவமைக்கப்பட்டது.

இருப்பினும் ஜல்லிக்கட்டு பொங்கல் திருநாள், சந்திரயான், இசை கருவிகளுக்கு இடையே SPB, கேரட்டை உண்ணும் முயல், யானை பராமரிப்பாளர்கள் பொம்மன் பெள்ளி, ஆகியவை பார்வையாளர்களையும் குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்தன.
மேலும் இந்த கண்காட்சியில் போன்சாய் செடிகள், வெளிநாட்டு செடிகள், மூலிகை செடிகள், வீட்டில் வளர்க்கப்படும் கண் கவர் மலர்கள், டென்னிஸ் ஆடுகளம், கிரிக்கெட் வீரர்களின் செல்பி ஸ்பாட், ஆகியவையும் இடம்பெற்று இருந்தன.

இந்த கண்காட்சியை பார்க்க வந்திருந்த அனைவரும் பல்வேறு இடங்களில் நின்று புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். மேலும் இந்த கண்காட்சியில் மலர் செடிகள் வளர்ப்பு மூலிகை செடிகள் வளர்ப்பு குறித்தும் பொது மக்களுக்கு எடுத்துரைக்கப்படுகின்றன.
இந்த கண்காட்சிக்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு நூறு ரூபாயும் குழந்தைகளுக்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் தற்காலிக உணவு விடுதிகளை அமைத்துள்ளன.

மேலும் இலவச குடிநீர் வசதியும் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த மாண்புமிகு தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள் பேசியது;-
இந்தப் பகுதியில் தென்னை விவசாயிகள் முதலமைச்சர் கோரிக்கை வைத்தனர். அதாவது தென்னை மரங்களில் வாடல் என்கிற பூச்சி தாக்கப்பட்டு தென்னை மரங்கள் சேதமடைகின்றன.

ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்
இந்த கோரிக்கையை தமிழக முதலமைச்சர் அவர்கள் நேரில் சென்று துணைவேந்தர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம் கலந்து கொண்டு இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என்று அமைச்சர் கூறினார். இங்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு மலர்கண்காட்சி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை இந்த பகுதியில் பொதுமக்கள் அனைவரும் இந்த கண்காட்சியை குடும்பங்களுடன் வந்து கண்டுக்களிக்க வேண்டும். நாள்தோறும் பல்வேறு குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற உள்ளதாக தெரிவித்தார். மேலும் இங்கு யோகா பயிற்சியும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் இந்த விழாவில்வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.