ரயில்வே கேட்டில் தமிழ் புறக்கணிப்பு தெலுங்குக்கு முன்னுரிமை.

2 Min Read
தெலுங்கில்

விழுப்புரம் வண்டிமேடு ரயில்வே கேட்டில் தமிழ் புறக்கணிப்பு தெலுங்கு இந்திக்கு முன்னுரிமை மீண்டும் தமிழில் எழுதப்பட்ட பலகை இறுதியில் எந்த மொழியிலும் இல்லாமல் அந்த பலகை முற்றிலுமாக அகற்றப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் – வேலூர் இடையேயான ரயில்வே இருப்பு பாதையில் விழுப்புரம் வண்டி மேட்டு – கே.வி.ஆர் நகர் செல்லக்கூடிய அந்த சாலையின் இடையே ரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது இந்த ரயில்வே கேட் சில தினங்களுக்கு முன்பு புனரமைக்கப்பட்டன. கேட் போடும்போது இருபுறமும் அதாவது அந்த கேட் கம்பத்தில் உள்ள பெயர் பலகையில் நில் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது புணர்மைக்கப்பட்ட ரயில்வே கேட்டில் தமிழுக்கு பதிலாக தெலுங்கில் எழுதப்பட்டுள்ளது.

தமிழில்

அதாவது நில் என்று தமிழ் வார்த்தைக்கு பதிலாக ஹிந்தி, இங்கிலீஷ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் எழுதப்பட்டிருந்தன. இதனை கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர், மேலும் ஒன்றிய அரசின் ரயில்வேதுறையின் இத்தகைய செயலுக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்து அங்கு உடனடியாக தமிழில் எழுத்த வேண்டும் என கடிதம் வாயிலாக ஒன்றிய அரசுக்கு வலியுறுத்தி  இருந்தனர். பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் என பலர் தெரிவித்த எதிர்ப்பின் விழுப்புரம் ரயில்வே ஊழியர்கள் உடனடியாக வந்து தெலுங்கில் எழுதப்பட்டிருந்த வார்த்தை மேல் அவசர அவசரமாக பேப்பரில் நில் என்று தமிழில் எழுதி ஒட்டி உள்ளனர்.

நீக்கப்பட்ட பதாகை

தமிழில் மீண்டும் எழுதி ஒட்டிவைத்துள்ளதிற்க்கு அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவின்னர். அதுவும் கொஞ்ச நேரம் தான் அதற்கு பின்னர் ஒட்டுமொத்தமாக அந்த பலகையை அங்கிருந்து அகற்றி விட்டனர். எதனால் அகற்றிணர் என்ற காரணமும் தெரிவிக்கப்படவில்லை தமிழ் மொழிக்காக பல போராட்டங்களை நடத்தி தமிழ்நாட்டில் தமிழர்கள் தமிழில் தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காக அரசியல் தலைவர்கள் போராடிய இந்த நிலையில் தெலுங்கானாவில் இருந்து வேலைக்கு வந்ததாக கூறி ஒரு கேட் கீப்பர் தனது சொந்த செல்வாக்கை பயன்படுத்தி தெலுங்கு மொழியை வளர்க்க நினைப்பது பலர் மத்தியிலும் புருவம் முயற்சி செய்கிறது.

மீண்டும் அந்த பகுதியில் தமிழில் நில் என்கிற வார்த்தை பொருந்திய அந்த ரயில்வே கேட்டில் பதாகை பொருத்த வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் ஒரு கோரிக்கையாக இருந்து வருகிறது. விரைவில் அந்த பகுதியில் நெல் பலகை பொருத்தப்படவில்லை என்றால் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்த போவதாகவும் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து தமிழுக்காக பல போராட்டங்களில் நடத்தி தமிழில் பாதுகாத்து வரும் நிலையில் தமிழை அப்புறப் படுத்திவிட்டு தெலுங்கு மொழிக்கு முன்னுரிமை கொடுப்பது என்பது மிகுந்த கவலை அழிப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Share This Article
Leave a review