- இருளிபட்டு கிராமத்தில் இயங்கி வரும் சூப்பர் பில் தனியார்
தொழிற்சாலை நிர்வாகத்தை கண்டித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலக முன்பாக உரிய நடவடிக்கை எடுக்க கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருளிபட்டு கிராமத்தில் இயங்கி வரும் சூப்பர் பில் தனியார் வலை தயாரிக்கும் தொழிற்சாலையில் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளால் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது கண்டித்து தொழிலாளர்களை பணிக்கு வரவிடாமல் செய்யும் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் வேலை நிறுத்தம் செய்யக்கூடாது தொழிலாளர்களின் குறைகளை தொழிலாளர் ஆணையத்திடம் முறையிடக்கூடாது விபத்து உயிரிழப்பு ஏற்பட்டால் புகார் செய்யக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளில் கையெழுத்து.
இட மறுத்த தொழிலாளர்களை பணிக்கு வர விடாமல் செய்வதாகவும் தொழிலாளர்கள் குற்றம் சாட்டினர்.. கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அலுவலகம் அருகிலேயே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
பேட்டி விஜயன் சிஐடி தொழிற்சங்கம்