கேரளாவில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்போகும் பிரதமர் நரேந்திர மோடி மீது மனிதவெடி குண்டு தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் கடிதம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .
இது தொடர்பாக போலீசார் மற்றும் உளவுத்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுவரும் இந்த வேலையில் , இந்த மிரட்டலை தொடர்ந்து கேரள மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது .
கேரள மாநில பாஜக தலைவர் சுரேந்திரனின் அலுவலகத்திற்க அனுப்பட்ட அந்த மிரட்டல் கடிதம் மலையாள மொழியில் எழுதியிருப்பதாகவும் இதனை கொச்சியை சேர்ந்த ஜானி என்ற நபரின் பெயரை குறிப்பிட்டு , அவர் தான் அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியதாக குறிப்பிட்டுள்ளனர் .
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜானி என்பவருக்கு ஆகாதவர்கள் , அவரை வேண்டுமென்றே இதில் சிக்கவைத்துளார்கள் எனினும் இந்த கடிதத்தை அனுப்பியது யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்தனர் .
பிரதமர் மோடி வருகிற ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். இதன்படி அவரது சுற்றுப்பயணம் டெல்லியில் தொடங்குகிறது. முதலில், மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு அவர் செல்கிறார். ரேவா நகரில் தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
தென்னிந்திய பகுதியான கேரளாவுக்கு அடுத்த நாள் காலை (25-ந்தேதி) 10.30 மணியளவில் அவர் சுற்றுப்பயணம் செய்கிறார்.
இந்த பயணத்தில், 11 மாவட்டங்களை இணைக்க கூடிய வகையிலான, திருவனந்தபுரம் மற்றும் காசர்கோடு இடையேயான கேரளாவின் முதல் வந்தே பாரத் ரெயிலை தொடங்கி வைக்கிறார். அதன்பின் காலை 11 மணியளவில், திருவனந்தபுரம் நகரில் ரூ.3,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டு அவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .