- தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதி சேதுபாவா சத்திரம் அரசு பள்ளியில் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்ட பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் 234/77 ஆய்வுத் திட்டத்தின் கீழ் சட்டமன்ற உறுப்பினர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதி, சேதுபாவாசத்திரம் பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில்இன்று காலை 196ஆவது ஆய்வை மேற்கொண்டார். பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்களைச் சந்தித்து உரையாடி ஊக்கமளித்தார்.
பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்குமாறு அறிவுறுத்தி, பள்ளிக்கு சுற்றுச்சுவர் தேவை என்ற ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.