இந்தியாவில் மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஹரியானாவில் உள்ள குருகிராமில் உள்ள நிர்வாக மேலாண்மை மையத்தின் பேராசிரியர் ராஜேஷ் கே பில்லானியா தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்ட போது மகிழ்ச்சியான மாநிலமாக மிசோரம் இருப்பது தெரியவந்துள்ளது.
குடும்ப உறவுமுறைகள், வேலை சார்ந்த பிரச்னை, சமூக பிரச்னை மற்றும் ஏழைகளுக்கு உதவி செய்தல், மதம், மகிழ்ச்சியில் கோவிட் ஏற்படுத்திய தாக்கம், உடல் மற்றும் மன நலம் உள்ளிட்ட அளவுகோலை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதுமட்டுமில்லாமல், 100 சதவீதம் கல்வியறிவு பெற்று இரண்டாவது இடத்தில் மிசோரம் மாநிலம் இருப்பதும் தெரியவந்துள்ளது. கடினமான நேரத்திலும் மாணவர்களுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாகவும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மிசோரம் மாநிலத்தில் உள்ள மாணவர்கள் கூறும்போது,” ஆசியர்கள் கல்வி கற்றுக் கொடுப்பவர்கள் மட்டுமல்ல. அவர்கள் எங்களுக்கு நண்பர்கள். எந்தவித பயமும், கூச்சமும் இல்லாமல் ஆசிரியர்களுடன் எங்களால் பகிர்ந்துகொள்ள முடியும்” என்றனர்.