பல்லடம் அருகே வினோத விழா – பச்சை ஆட்டுக்கறியை சாப்பிட்ட பூசாரி..!

1 Min Read

திருப்பூர் மாவட்டம், அடுத்த பல்லடம் அருகே நாசுவம்பாளையம் என்ற பகுதியில் அண்ணமார் கோவிலில் பாரம்பரியமான பன்றி குத்தும் விழா நடைபெற்று வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

குறிப்பாக வடுகபாளையம், சின்னூர் வெங்கிட்டாபுரம், நாசுவம்பாளையம் உள்ளிட்ட 4 கிராமத்தின் பாதுகாவலராக விளங்கக்கூடிய அண்ணன்மார் சாமி கோவிலில் 3000 ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரிய விழா கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.

வினோத விழா – பச்சை ஆட்டுக்கறியை சாப்பிட்ட பூசாரி

இந்த நிலையில் மிக முக்கிய பூஜைக்கான இன்று கிளி பிடித்து வந்து அண்ணன்மார்களின் தங்கைக்கு படைத்து பிறகு பன்றிகுத்தி அதேபோல ஆட்டுக்குட்டியையும் குத்தி அதன் பச்சை கறியை பூசாரி ஆவேசமாக சாப்பிட்டு ஒரு வினோத முறையில் இந்த விழாவானது நடைபெற்று வருகிறது.

சேர, சோழ, பாண்டிய மன்னர் காலத்தில் சோழ நாட்டில் இருந்து பாண்டிய நாட்டிற்கு விவசாயத்தை அழிப்பதற்காக அன்றைய கால மன்னர்களால் பன்றி, மற்றும் ஆடுகள் அனுப்பப்பட்டதாகவும்,

வினோத விழா – பச்சை ஆட்டுக்கறியை சாப்பிட்ட பூசாரி

அவ்வாறு அனுப்பப்பட்ட பன்றிகள் ஆடுகளை எல்லாம் பாண்டியர்கள் கொன்று, சாப்பிட்டு ஆளுக்கு ஒரு பங்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

அதே முறையை 3000 ஆண்டுகளாக இந்த தமிழ்நாட்டில் கடைபிடித்து அண்ணன்மார் கோவில்களில் எல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை இவ்வாறு விழா எடுப்பது வழக்கம் என்றும் தெரிவித்து,

வினோத விழா – பச்சை ஆட்டுக்கறியை சாப்பிட்ட பூசாரி

இந்த விழா இப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அனைவரும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share This Article
Leave a review