தனிக்கட்சி தொடங்குகிறாரா? ஓபிஎஸ்!

1 Min Read

நீதிமன்ற தீர்ப்பினால். இனியும்  தன்னை நம்பி வந்தவர்களுக்கு என்ன செய்யப் போகிறார் ஒ. பன்னீர்செல்வம் என்கிற எதிர்பார்ப்பு பொதுவாக எல்லோரிடமும் இருந்து வருகிறது. ஓ பன்னீர்செல்வம் நமக்கு எதுவும் செய்ய மாட்டார் என்பது அவருடன் இருப்பவர்களுக்கு மற்றவர்களை விட அதிகம் தெரியும்.

- Advertisement -
Ad imageAd image

எடப்பாடி அணியின் எதிர்ப்பினாலும், அதிருப்தியாலும் தான் அவர்கள் ஓபிஎஸ்ஐ தலைவராக கொண்டு இயங்கி வருகிறார்கள்.
தர்ம யுத்தம் கலைந்த உடன் ஓபிஎஸ் தன் ஆதரவாளர்களுக்கு என எந்த பதவியும் பெரிதாக பெற்றுத் தரவில்லை உதாரணத்திற்கு செம்மலை முன்னாள் அமைச்சர். தனக்கு துணை முதல்வர் பதவியும் மகனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பெறுவதற்காகவே அவர் தர்ம யுத்தம் இருந்தார் என்பது அப்போதே வெட்ட வெளிச்சமானது. அதையும் மீறி ஏதாவது செய்ய மாட்டாரா! என நம்பி இருந்தார்கள் தொண்டர்களும் நிர்வாகிகளும்.

இனி எந்த அணிக்கும் செல்ல முடியாமல் நட்டாற்றில் விட்டது போல் கலங்கியிருக்கிறார்கள் அவரை நம்பி வந்த நிர்வாகிகளும்,தொண்டர்களும். பாஜக உடன் தனக்கு நெருக்கம் இருப்பதாக காட்டிக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தன் மகனை பாஜகவில் உறுப்பினராக்கி மீண்டும் அதே தொகுதியில் வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெற செய்கிற ஒரு நோக்கத்திற்காக தான் இப்போதும் இயங்கி வருகிறார் என்பது உண்மை. இந்த நிலையில் ஊடகங்கள் அவர் தனி கட்சி தொடங்குவாரா மாட்டாரா என கேள்வி எழுப்பி வருவது பத்திரிக்கை பக்கத்தை நிரப்புவதற்கு தானே தவிர, அப்படி ஒன்றும் நிகழப் போவதில்லை.
ஆயா வடை சுட்ட கதையில் திருடி சென்ற காக்கா நரியிடம் ஏமாந்தது ஒரு காலத்தில். அதன் பிறகு நரி காக்காவிடம் ஏமாந்ததாக நமக்கு சொல்லப்பட்டது. கதை உண்மையிலே என்னவென்றால் ஏமாந்தது அந்த ஆயா தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும். அதே நிலைதான் ஓபிஎஸ்ஐ நம்பி வந்த தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும்.

ஜோதி நரசிம்மன்
ஆசிரியர்
தி நியூஸ் கலெக்ட்

Share This Article
Leave a review