உத்தரபிரதேசத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆன்மிக சுற்றுலா வந்த பயணிகள் ரெயில் மதுரை ரெயில் நிலையம் அருகே சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்து எரிந்தது. இதில் 3 பெண்கள் உள்ளிட்ட 9 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயர சம்பவத்திற்கு சிலிண்டர் வெடித்ததே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுற்றுலா ரெயிலில் 2 பெட்டிகள் மதுரை ரெயில் நிலையத்துக்கு முன்னதாகவே 1 கிலோ மீட்டர் தொலைவில் பிரித்து தனி தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் சுற்றுலா பயணிகள் அனைவரும் அதிக களைப்புடன் அயர்ந்து தூங்கினர்.
சிலர் காலை கடன்களை முடிப்பதற்காக ரெயில் பெட்டிகளில் இருந்து இறங்கி நின்றனர். இந்த நிலையில் சிலர் டீ, காபி கேட்டதால் அடுப்புகள் பற்ற வைக்கப்பட்டன. இந்த நேரத்தில் சிலிண்டரில் கியாஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அருகே இருந்த இன்னொரு சிலிண்டரும் வெடித்துச் சிதறியதால் ரெயில் பெட்டி முழுவதும் தீயில் கருகி சாம்பலானது. பயணம் செய்த சிலர் அலறியடித்து உயிர் தப்பிய நிலையில் 9 பேர் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். 15 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மதுரை ரயில் தீ விபத்திற்கு காரணமானவர்கள் என அறியப்பட்ட 5 பேர் கைது. மருத்துவப் பரிசோதனை முடித்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த சனிக்கிழமை அதிகாலை, மதுரை போடி லைன் ரயில்வே நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா ரயில் பெட்டியில் தீவிபத்து ஏற்பட்டு, 9 வட மாநிலத்தவர்கள் பரிதாபதமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்திற்கு காரணம் கேஸ் சிலிண்டர் கொண்டு ரயில் பெட்டிக்குள் தேநீர் தயாரிக்க முற்பட்டதே காரணம் என விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தடை செய்யப்பட்ட சிலிண்டர், அடுப்பு, விறகு போன்ற பொருட்களையும் சட்டத்திற்குப் புறம்பாக தங்களுடன் ரயிலில் எடுத்து வந்தக் குற்றச்சாட்டின் பேரில், ஐ.பி.சி. 304 (II), 285 மற்றும் 164 IRACT பேரில் ஐவர் கைது செய்யப்பட்டு, மதுரை ராசாசி மருத்துவனையில் மருத்துவப் பரிசோதனைக்குப் பின், நீதி மன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர்.
தீபக் & சத்பிரகாஷ் ரஸ்தோகி என இருவரும் சமயல்காரர்கள் , சுபம் கஸ்யம் என்பவர் உதவியாளர் , நரேந்தர் குமார் என்பவர் சுற்றுலா வழிகாட்டி, ஹார்திக் சஹானி அனைவரும் உத்தரபிரதேச மாநிலம், சீட்டாபூரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.