கொள்ளையடித்ததை முதலீடு செய்ய ஸ்டாலின் வெளிநாடு பயணம் – எடப்பாடி பழனிசாமி..!

2 Min Read

நமக்கு எதிரிகளே இல்லை, கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காகவே ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளார் என தஞ்சையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு.

- Advertisement -
Ad imageAd image

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச்செயலாளரும் – முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி வருகைப் புரிந்தார். முன்னதாக தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் பிரிவு சாலையில் 107 வது எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு 70 அடி உயரமுள்ள கட்சி கொடியினை ஏற்றி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது எதிரிகள் எதிரே இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது. அதிமுகவை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்ய முடியாது. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா இருவரும் இறைவன் சக்தி பெற்று கட்சியை காத்து வருகின்றனர். யார் கெடுதல் நினைத்தாலும் அவர்கள்தான் கெட்டுப் போவார்கள்.

எடப்பாடி பழனிசாமி

இந்த இயக்கத்தை அழிக்க நினைத்தார்கள் அழிந்து போனார்கள். இந்த இயக்கத்தை கெடுக்க நினைத்தார்கள் கெட்டுப் போனார்கள். இதுதான் இன்றைய நிலை. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லக்கூடிய பொம்மை  100% தேர்தல் அறிக்கை நிறைவேற்றி விட்டதாக ஒரு பொய்யை சொல்லி முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துக் கொண்டிருக்கிறார்.

ரெண்டு ஆண்டு திராவிட முன்னேற்ற ஆட்சி காலத்தில் கொள்ளையடித்து ஒன்றுதான் குறிக்கோளாக இருந்து கொள்ளையடித்திருக்கிறார்கள். அந்த கொள்ளையடித்தை பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாடு சென்றிருக்கிறார் முதலமைச்சர். தொழில் முதலீட்டை ஈர்க்கச் செல்லவில்லை அப்படி ஈர்க்க வேண்டும் என்றால் அண்மையில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்

அப்போதே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருக்கலாம். அதற்காக அவர் செல்லவில்லை. ஸ்பெயின் உள்ளிட்ட இன்னும் பல நாட்டுக்கு செல்வதற்கு என்ன காரணம் கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக தான் போகிறார். முதலீடு கொண்டு வரப் போகவில்லை, கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்வதற்காக வெளிநாடு சென்றுள்ளார் இன்றைய முதலமைச்சர்.

கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசுக்கு, வாக்குறுதியை நிறைவேற்றாத கட்சிக்கு இந்த தேர்தலில் சரியான மரண தண்டனை கொடுக்க வேண்டும், மரண அடியை கொடுக்க வேண்டும். இந்த தேர்தல் தான் 2026 ஆட்சிக்கு வருகிற அடித்தளம் அமைக்கின்ற தேர்தலாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Share This Article
1 Review