தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி தனது பெற்றோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வசித்து வந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு சிறுமிக்கு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது தொழிலாளிக்கும், இருவீட்டார் சம்மதத்துடன் நெருப்பூர் அருகே உள்ள ஒரு கோயிலில் திருமணம் நடந்தது.தற்போது இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் குழந்தையை சிறுமி சரிவரா கவனிக்காததால் அவரது மாமனார், மாமியார் சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கணவன் வீட்டார் தன்னை கொடுமை படுத்துவதாக ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ஏரியூர் சிறப்பு எஸ்எஸ்ஐ சகாதேவன் (55) விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது சிறுமியின் செல்போன் என்னை பெற்றுக்கொண்ட எஸ்எஸ்ஐ சகாதேவன் அவரிடம் அடிக்கடி பேசி பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

பின்னர் அந்த சிறுமியுடன் நெருங்கி பழகிய அவர், மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் செல்போனில் இருந்த கால் ரெகார்ட் மூலம் எஸ்எஸ்ஐ உடன் அவருக்கு இருந்த தகாத உறவு அவரது கணவருக்கும் தெரியவந்தது. மேலும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் உன் மனைவியை விசாரணை என்ற பெயரில் எஸ்எஸ்ஐ பைக்கில் அழைத்து செல்கிறார் எனக் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மனைவியை கண்டித்து அடித்துள்ளார். இதனால் அந்த சிறுமி சைல்ட் லைன் அமைப்பை தொடர்பு கொண்டு தனது கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்துள்ளார்.
இதை அடுத்து சைல்ட் லைன் அதிகாரிகள் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். அங்கு காப்பக அதிகாரிகள் சிறுமியிடம் விசாரித்த போது ஏரியூர் போலீஸ் எஸ்எஸ்ஐ சகாதேவன் தன்னை மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது தொடர்பாக பென்னாகரம் குற்றவியல் நீதிமன்றத்தை நாடி உள்ளனர். அங்கு நீதிபதி முன்னிலையில் சிறுமி வாக்குமூலம் அளித்தார். அதன் பெயரில் எஸ்எஸ்ஐ சகாதேவன் மீது பென்னாகரம் அனைத்து மகளிர் போலீசார் போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்எஸ்ஐ சகாதேவன் தலைமறைவாகிவிட்டார். இதனிடையே நேற்று முன்தினம் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்எஸ்ஐ சகாதேவன் சரணடைந்தார். இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்து பென்னாகரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதன் இடையே கைது செய்யப்பட்ட எஸ்எஸ்ஐ சகாதேவன் சஸ்பெண்ட் செய்து தர்மபுரி மாவட்டம் எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவிட்டார். புகார் கொடுக்க வந்த 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்த எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் தர்மபுரி மாவட்ட போலீசார் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.