ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர் மீது கோவில் பாதுகாவலர் தாக்கியதால் கோவில் நடை அடைப்பு..!

3 Min Read

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் பக்தர் மீது கோவில் பாதுகாவலர் தாக்கியதால், பக்தர் சென்னாராவுக்கு மூக்குடைந்து ரத்தம் கொட்டியதால் கோவில் நடை அடைக்கப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் அரங்கநாதருக்கு வைகுண்ட ஏகாதேசி திருவிழாவானது. இன்று திருநெடும் தாண்டகம் என்னும் உற்சவத்தின் மூலம் துவங்க உள்ளது. இந்த துவக்க நாளான இன்று காலையில் அரங்கனை தரிசிக்க வந்த கர்நாடகம் மற்றும் ஆந்திர ஐயப்ப பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஏற்பட்ட மோதலால் அடிதடி உருவாகி, அங்கு ஐயப்ப பக்தர் சென்னராவ் உள்பட பலர் தாக்கப்பட்டனர். இந்த நிலையில் சென்னாராவை தாக்கிய தற்காலிக ஊழியர்களான செல்வம், விக்னேஷ், பரத் குழுவினர் மீது காவல்துறையினரிடம் புகார் மனு அளித்துள்ளார். தாக்குதலுக்கு ஆளான ஐயப்ப பக்தர்கள், ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஐயப்ப பக்தர்

இங்கு கோவிலில் உள்ள காவல்துறையினர், அடிபட்ட ஐயப்ப பக்தர்களுக்கு ஆதரவாக இல்லாமல், தாக்குதல் நடத்திய கோவில் ஊழியர்களுக்கு துணைபுரிந்து தாக்குதலுக்கு உள்ளாகி காயம்பட்டவர்களை கோவிலுக்கு வெளியே தள்ளிகொண்டு வந்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தை மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை கோபுரம், கொடிமரம் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் தடுத்துள்ளனர். அப்போது தங்களை தாக்கிய தற்காலிக ஊழியர்களான மூவர் மீதும், கோயில் நிர்வாகத்தின் மீதும் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஐயப்ப பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில் கேள்வி எழுப்பி உள்ளனர். அப்போது கோவிலுக்குள் தகராறு ஏற்பட்டு ரத்தகளறி ஆகியுள்ளது.

பக்தர் மீது கோவில் பாதுகாவலர் தாக்கிய சம்பவம்

கோவில் நிர்வாகத்தில் இருந்து அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் என்பதற்கு அவர்களின் திமிரான நடவடிக்கை பல காரணங்களில் ஒன்றாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோவிலில் புனிதத்தை கெடுக்கும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருச்சி மாவட்ட பிரிவினர் இன்று கோவிலின் வெளியே போராட்டம் நடத்த உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், கோவில் நிர்வாகம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று காலை சுமார் ஏழு மணி அளவில் ஸ்ரீரங்கம் காயத்ரி மண்டபத்தில் பக்தர்கள் வரிசையில், ஆந்திராவைச் சேர்ந்த 34 நபர்கள் காயத்ரி மண்டபத்தில் உள்ள உண்டியலை மிகுந்த ஓசை உடன் அடித்துள்ளார்கள், உண்டியலையும் பிடித்து ஆட்டி உள்ளார்கள். இதனை தட்டிக்கேட்ட திருக்கோவில் பணியாளரை தலை முடியைப் பிடித்து, அதே உண்டியலில் மோதச் செய்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

எனவே ஒரு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், தட்டி கேட்ட காவலரையும் ‘போலீஸ் டவுன் டவுன்’ என்று கோஷம் எழுப்பினார்கள். மற்ற பக்தர்கள் யாரையும் தரிசனம் செய்யவிடாமல், இடையூறு செய்ததால் உடனே காவல்துறையில் புகார் செய்து, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நின்றிருந்த போது அங்கு நின்றிருந்த ஆந்திராவை சேர்ந்த 34 பக்தர்கள் வரிசை மெதுவாக செல்வதாக குற்றம்சாட்டி கூச்சலிட்டுள்ளனர். மேலும் அங்கிருந்த உண்டியலை வேகமாக தட்டி உள்ளனர். இதனால் அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த பாதுகாவலர்கள் பரத், விக்ணேஷ் ஆகியோர் அவர்களை அமைதிப்படுத்த முயற்சித்த போது பக்தர்கள் 34 பேரும் சேர்ந்து கோவில் பாதுகாவலர்களை தாக்கி உள்ளனர்.

Share This Article
Leave a review