Sri Lanka : அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு இல்லை – இலங்கை அதிபர்..!

1 Min Read

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு இல்லை என்றும் சம்பள உயர்வு வழங்கினால் அரசுக்கு சிரமங்கள் ஏற்படும் என்று இலங்கை அதிபர் கூறினார்.

- Advertisement -
Ad imageAd image

இலங்கை அதிபர் விக்ரமசிங்கே பேசியதாவது;- ‘‘நாட்டின் பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்று நாம் மீண்டு வருகிறோம். கடந்த 2, 3 வருடங்களில் இலங்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொண்டோம். இப்போது படிப்படியாக பொருளாதாரத்தை சீரமைத்து வருகிறோம்.

அரசு ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு இல்லை

கடனை திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைகளையும் பெற்றுள்ளோம். இப்போது சிலர் சம்பள உயர்வு வேண்டும் என்கிறார்கள். இது கடினமானதாகும். ஆசிரியர்களுக்கு 2022-ல் சம்பள உயர்வை வழங்கியுள்ளோம். மேலும் 2024-ல் பத்தாயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது.

எனவே அந்த கோரிக்கைகள் நியாயமற்றவை. இந்த சம்பள உயர்வு செய்தால் கொடுக்க அரசாங்கத்திடம் பணம் இல்லை. அதனால் வாட் வரியை அதிகரிக்க வேண்டும். இப்போது வாட் 18% வரி வசூலிக்கப்படுகிறது. சம்பள உயர்வு வழங்க, மீண்டும் வரியை அதிகரிக்க வேண்டும்.

இலங்கை அரசு

மக்களால் அதை தாங்க முடியாது. மேலும் 10 லட்சம் அரசு ஊழியர்களே நாட்டில் இருக்க வேண்டும். இப்போது 15 லட்சம் பேர் உள்ளனர். இதனால், இந்த ஆண்டு அவர்களுக்கு சம்பள உயர்வை வழங்க முடியாது. சம்பள உயர்வு வழங்கினால் சிரமம் ஏற்படும்’’ என்றார்.

Share This Article
Leave a review