ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடு..!

2 Min Read
கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு வழிபாடு விமர்சித்தியாக நள்ளிரவு கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவாலயங்களில் நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 2023ம் ஆண்டு முடிந்து 2024 ஆங்கிலப்புத்தாண்டு இன்று பிறக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் மக்கள் புத்தாடை அணிந்து அதிகாலை முதல் குடும்பத்துடன் கோயில்களுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று கோயில்களில் கூட்டம் அதிகமாக காணப்படும்.

- Advertisement -
Ad imageAd image
கோயில்களில் சிறப்பு வழிபாடு

புத்தாண்டை வரவேற்கும் வகையில் அதிக அளவிலான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சென்னையில் உள்ள அனைத்து கோயில்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மாதவ பெருமாள் கோயில், ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், பாரிமுனை கந்தகோட்டம் முருகன் கோயில், வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோயில் மற்றும் திருவேற்காடு கருமாரியம்மன் கோயில், மாங்காடு காமாட்சியம்மன் கோயில், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி கோயில், குன்றத்தூர் முருகன் கோயில், தி.நகர் திருப்பதி தேவஸ்தானம், நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில், கே.கே.நகர் சித்திபுத்தி விநாயகர் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே கோயில்களில் நடைதிறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். கூட்ட நெரிசலை தவிர்க்கவும், விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையிலும் பக்தர்கள் வசதிக்காக கம்புகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நிர்வாகம் சார்பில் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. அதேபோன்று ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னையில், உள்ள சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம், மயிலாப்பூர் லஸ் பிரகாச மாதா தேவாலயம், அடையாறில் உள்ள இயேசு அன்பர் கிறிஸ்தவ தேவாலயம், ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயம், அண்ணாசாலை மேம்பாலம் அருகில் கதீட்ரல் தேவாலயம், எழும்பூரில் செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் தேவாலயம், ராயப்பேட்டை காணிக்கை அன்னை தேவாலயம், எழும்பூர் திரு இருதய ஆண்டவர் திருத்தலம் உள்ளிட்ட நகர் முழுவதும் உள்ள தேவாலயங்களில் நள்ளிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை வரை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்த பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review