நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. ஏற்கனவே, அதிமுக பலகட்ட பேச்சுவார்த்தை நடத்திய பின், திடீரென பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்திருந்தது.
அந்த கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது அதுமட்டுமின்றி பல முக்கிய நிர்வாகிகள் பாமகவில் இருந்து வெளியேறினர். இந்த நிலையில் பாமகவின் வேட்பாளர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில், தர்மபுரி தொகுதியில் பாமக சார்பில் அரசாங்கம் வேட்பாளர் என நேற்று காலையில் அறிவிக்கப்பட்டார். ஆனால் நேற்று மாலை வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்துள்ளது.
அவருக்கு மாற்றாக பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும் பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவருமான சவுமியா தர்மபுரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:

தற்போது 2024 மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட தர்மபுரி மக்களவை தொகுதியில் அரசாங்கம் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது அவர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக பசுமைத்தாயகம் அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.