ஓசூர் அருகே பாரம்பரிய எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்..!

2 Min Read
எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

ஓசூர் அருகே நடந்த பாரம்பரிய எருதாட்ட விழா. அப்போது 500-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்ப்பு. இந்த கூட்டத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்.

- Advertisement -
Ad imageAd image
எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

ஓசூர் அருகே உள்ள நரசிபுரம் கிராமத்தில் தலைமையில் இன்று காலை பாரம்பரிய எருதாட்ட விழா நடைபெற்றது. இந்த எருதாட்ட விழா அதிமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட சூளகிரி மேற்கு ஒன்றிய பொருளாளர் டி. நாராயணப்பா என்பவர் தலைமையில் நடைபெற்றது.

எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

இந்த பாரம்பரிய எருதாட்ட விழாவில் தமிழகத்தில் ஓசூர் தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ராயக்கோட்டை, உத்தனப்பள்ளி, பாகலூர், பேரிகை, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன.

எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

அப்போது வாடி வாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் கொம்புகளில் வண்ண வண்ண தோரணங்கள் மற்றும் தடுக்குகளை கட்டப்பட்டு கூட்டத்தில் சீறிப்பாய்ந்தது. அப்போது இந்த கூட்டத்தில் நடுவே நின்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் இளைஞர்கள் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை பிடித்து அடக்கி பரிசுகளை பறித்து வீரத்தை நிலை நாட்டினர்.

எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

இந்த பாரம்பரிய எருதாட்ட விழாவில் சூளகிரி ஓசூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் அண்டை மாநிலங்களில் இருந்து 10,000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பாதுகாப்பு ஏற்பாடுகளை சூளகிரி காவல்துறையினர் செய்திருந்தனர்.

எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

இந்த நிகழ்ச்சிக்கு சிரிப்பு விருந்தினர்களாக அதிமுக சூளகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலர் மாண பாபு வெங்கடாசலம், அத்திமுகம் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், சுப்பிரமணி மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

எருதாட்ட விழாவில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய வீரர்கள்

அப்போது முன்ராஜ், செந்து, நாராயண அப்பா, சிவக்குமார், பாசப்பா, குருமூர்த்தி, கிருஷ்ணா, முனிராஜ், மல்லேஷ், முனியப்பா, கணேஷ், காலை உரிமையாளர்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a review