வன உயிரினங்கள் வேட்டை-வேடிக்கை பார்க்கும் சிவகிரி வனத்துறையினர்…!

2 Min Read

சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அதிகரிக்கும் வன உயிரினங்கள் வேட்டை. வேடிக்கை பார்க்கும் சிவகிரி வனத்துறையினர். வனவிலங்கு வேட்டையில் ஈடுபடுபவர்களை வனத்துறையினருக்கு காவல்துறையினர் பிடித்து கொடுக்கும் அவலம் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை. தென்காசி மாவட்டம் சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையானது இயற்கை எழில் கொஞ்சும் பசுமையாக காணப்படக்கூடிய மலையாகும்.

- Advertisement -
Ad imageAd image

இந்த மழையில் அரிய வகை உயினங்களான உடும்பு, எறும்புத்திண்ணி, யானை, மான், கரடி, சிறுத்தை மற்றும், பன்றி, போன்ற பல்வேறு வகையான உயினங்களுடன் அரிய வகை மூலிகை செடிகளும், விலை உயர்ந்த மரங்களும் இருக்கிறது. மேற்குதொடர்ச்சி மலை மற்றும் மலையில் வாழக்கூடிய உயிரினங்களை பாதுகாக்க அரசு வனத்துறையினரை உருவாக்கினர்.

மான் கொம்பு வேட்டையாடியதை பறிமுதல் செய்யப்பட்டது

வனத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாதம் பல இலட்சம் ரூபாய் சம்பளம் கொடுத்தும் சிவகிரி வனத்துறையினர் வனஉயிரினங்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்த்து கட்டப்பஞ்சாயத்து செய்து வருவது வேடிக்கையாக இருந்து உள்ளது. மேலும் வன குற்றங்களுக்கு சிவகிரி வனத்துறையினரே உடந்தையாக இருப்பதாக வன ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் சிவகிரி மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வனப்பகுதிக்குள் நாள்தோறும் வனக்குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை வனத்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதனைதொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் வாகன சோதனையின் போது சிவகிரி வனத்துறை அலுவலகம் அருகே சந்தேகபடும் படி நின்று கொண்டிருந்த காரை சிவிகரி காவல்துறையினர் சோதனை செய்த போது அதில் மான் கொம்பு இருந்துள்ளது.

சிவகிரி மாவட்டம்

இதனையடுத்து வாகனத்தை பறிமுதல் செய்து இருவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்ற காவல்துறையினர் விசாரனை செய்து சிவிகிரி வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். சிவகிரி வனத்துறையினர் இரண்டு நாட்களாக கட்டப்பஞ்சாயத்து செய்து விசாரணை மேற்கொண்டதில் புள்ளி மானை வேட்டையாடியதாக விசாரணையில் தெரியவந்தது. இதனை தொடர்ந்து கிருஷ்ணகுமர் வயது (24), தியாகு வயது (24), ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சம் ரூபாய் அபராம் விதித்து சிவகிரி வனத்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறன.

சிவகிரி வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடாமல் மெத்தனமாக செயல்பட்டு உயர் அதிகாரிகளுக்கு நேர்மையாக இருப்பதாகவும், வன உயிரினங்களை பாதூக்கவும் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாக நடித்து வரும் சிவகிரி வனத்துறையினர் தற்போது வன குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மெத்தனமாக செயல்பட்டு வரும் சிவகிரி வனத்துறையினர் மீது தமிழக வனப்பாதுகாவலர் சுப்ரியா சாகு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது வன ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Share This Article
Leave a review