அதிர்ச்சி தகவல் : சேலத்தில் பட்டியலின மக்களுக்கு முடி த …

2 Min Read

சேலத்தில் பட்டியலின மக்களுக்கு முடி திருத்த மறுக்கும் கடை உரிமையாளர் மீது புகார் கொடுத்த நபரிடம் நீ எதற்காக அங்கு செல்கிறாய் என அலட்சியமாக பதில் கொடுத்த காவல் துணை கண்காணிப்பாளர்.

- Advertisement -
Ad imageAd image

சேலம் மாவட்டம், அடுத்த மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் காவேரிபுரம் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவர் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் 300-க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து

இந்த நிலையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ரமேஷ் நடத்தி வரும் முடி திருத்தும் கடைக்கு சென்று உள்ளார். அப்போது முடி திருத்தும் கடைக்காரர் அந்த நபரிடம் நான் உங்களுக்கு முடி திருத்த மாட்டேன்.

அதற்கு அந்த நபர் எதற்காக முடி திருத்த மாட்டீர்கள் என்று கேட்டதற்கு அதற்கு நீங்கள் பட்டிலின மக்களை சேர்ந்தவர்கள் என்று கூறினார். அதற்கு அந்த நபர் உங்கள் மீது போலீசிடம் புகார் கொடுப்பேன் என்று சொன்னார். அதற்கு அந்தக் கடைக்காரர் நீங்கள் புகார் வேண்டுமானால் கொடுத்துக் கொள்ளுங்கள்.

பட்டியலின மக்களுக்கு முடி திருத்த மறுக்கும் கடை உரிமையாளர்

ஆனால் நான் உங்களுக்கு முடி திருத்த மாட்டேன் அவ்வாறு நான் முடி திருத்தினால் என்னிடம் வேறு நபர்கள் யாரும் முடி திருத்த வர மாட்டார்கள் என கூறி திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வீடியோ ஒன்று எடுத்துள்ளார்.

இந்த வீடியோ ஆதாரத்துடன் சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்துவிடம் புகார் கொடுத்துள்ளார். மேலும் இந்த புகார் தொடர்பாக டி.எஸ்.பி-யிடம் சம்பந்தப்பட்ட நபர் பேசும் போது டி.எஸ்.பி முடி வெட்டவில்லை என்றால் விட வேண்டியது தானே ஏன் அவரிடம் மீண்டும் மீண்டும் சென்று தகராறு செய்கிறீர்கள் என டிஎஸ்பி பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

சேலம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மரியமுத்து

மேலும் முன்னதாக தன் வீட்டில் உள்ள ஒரு சிறுவனை அழைத்துக் கொண்டு முடி திருத்த சென்ற போது முடி திருத்தும் கடை நடத்தி வரும் ரமேஷ் என் பிறப்பில் மன்னவாரி போற்றாத பா என பேசிய வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது. இதனால் இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த உள்ளது.

Share This Article
Leave a review