அதிர்ச்சி.! – டிரம்பிற்கு முதல் தோல்வி – அமெரிக்க அதிபர் தேர்தலில் தலைநகர் வாஷிங்டனில் படுதோல்வி..!

3 Min Read

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு டிரம்ப் தயாராகி வரும் நிலையில், அதிர்ச்சி தரும் விதமாகத் தலைநகர் வாஷிங்டனிலேயே அவர் படுதோல்வி அடைந்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் கடந்த பல மாதங்களாகவே அங்குத் தீவிரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை அங்கே வேட்பாளர் தேர்வே சுவாரசியமாக இருக்கும்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தலைநகர் வாஷிங்டனில் படுதோல்வி

அதாவது அங்கே ஜனநாயக கட்சியும், குடியரசு கட்சியும் தான் பிரதான கட்சிகள். இரு கட்சிகள் சார்பிலும் அதிபர் தேர்தலுக்குப் போட்டியிடப் பலர் விருப்பம் தெரிவிப்பார்கள். அவர்களுக்குள் உட்கட்சி தேர்தல் நடத்தப்பட்டு அவர்களில் யாருக்கு ஆதரவு அதிகமாக இருக்கோ அவர்களே வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள்.

அங்கே ஒரு நபரால் 2 முறை அதிபராக இருக்க முடியும். எனவே, முதல் தடவை அதிபராக இருக்கும் நபர் தான் பெரும்பாலும் அடுத்த முறையும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவார். அதன்படி இப்போது ஜனநாயக கட்சியிம் பைடன் அதிபராக இருக்கும் நிலையில், அவரே இந்த முறையும் மீண்டும் போட்டியிடுகிறார்.

நிக்கி ஹேலி , டிரம்ப்

மறுபுறம் குடியரசு கட்சி சார்பில் பலர் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தனர். இருப்பினும், அங்கே டிரம்பிற்கு தான் ஆதரவு அதிகமாக இருந்தது. அதன் தொடர்ச்சியாக அவர் உட்கட்சி தேர்தல்களில் வென்று வந்த நிலையில், அவரை எதிர்த்த பலரும் போட்டியில் இருந்து விலகினர்.

இப்போது நிக்கி ஹேலிக்கும் டிரம்பிற்கும் இடையே தான் போட்டி. இதற்கிடையே டிரம்பிற்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக அவர் முதல் தோல்வியை எதிர்கொண்டுள்ளார். உட்கட்சி தேர்தலில் அவர் தோல்வியடைவது இதுவே முதல்முறை.

நிக்கி ஹேலி , டிரம்ப்

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டிசியில் நடந்த குடியரசுக்கட்சி அதிபர் தேர்தலில் நிக்கி ஹேலி வெற்றி பெற்றார். அதிபர் ரேஸ் தொடங்கியது முதலே பின்தங்கி இருந்த நிக்கி ஹேலி, இப்போது முதல் முறையாகத் தலைநகர் வாஷிங்டனில் நடந்த உட்கட்சி தேர்தலில் வென்றுள்ளார்.

நாளை செவ்வாய்க்கிழமை 15 மாகாணங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் உட்கட்சி தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கு முன்பு டிரம்பை வீழ்த்தி இருப்பது நிக்கி ஹேலிக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருக்கிறது.

நிக்கி ஹேலி , டிரம்ப்

அமெரிக்க தலைநகராக உள்ள வாஷிங்டன் எப்போதும் ஜனநாயக கட்சி வலுவாக இருக்கும் நகரமாகவே இருந்துள்ளது. அங்கே குடியரசு கட்சியினர் ஆதரவு ரொம்பவே குறைவு. அதிலும் குறிப்பாக டிரம்ப் போன்ற தீவிர பழமைவாதிகளுக்கு அங்கே ஆதரவு சுத்தமாக இருக்காது.

ஹேலி அங்கே டிரம்பை வீழ்த்த இதுவும் ஒரு காரணமாகும். அப்போது அங்கே மொத்தம் பதிவான வாக்குகளில் 63% வாக்குகள் ஹேலிக்கு ஆதரவாக விழுந்துள்ளது. இந்த வெற்றிக்கு பிறகு ஹேலி தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில்;-

நிக்கி ஹேலி , டிரம்ப்

அதிபர் தேர்தலில் தோற்ற பிறகு அதிபர் பதவியை விட்டு விலக மாட்டேன் என வாஷிங்டனில் குழப்பத்தை ஏற்படுத்திய டிரம்பையும் அவரது சகாக்களையும் மக்கள் முழுமையாக நிராகரித்துள்ளது ஆச்சரியம் இல்லை. இது வரும் காலங்களில் நாடு முழுக்க எதிரொலிக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

அதேநேரம் டிரம்பின் தரப்பும் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. வாஷிங்டனில் பெற்ற வெற்றி பெரிய விஷயமில்லை. நாளை நடைபெறும் 15 மாகாண உட்கட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறப்போவது உறுதி என்று கூறியுள்ளனர். வாஷிங்டன் தவிர அனைத்து தேர்தல்களிலும் டிரம்பே வென்றுள்ளார்.

நிக்கி ஹேலி , டிரம்ப்

அவருக்கு குடியரசு கட்சியில் எந்தளவுக்கு ஆதரவு இருக்கிறது என்பதையே இது காட்டுகிறது. ஹேலி நாளை நடக்கும் 15 மாகாண தேர்தல்களில் வென்றால் மட்டுமே அவர் அதிபர் ரேஸில் தொடர்ந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது.

Share This Article
Leave a review