பேருந்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்,வாலிபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்த பயணிகள்

1
64
கைது செய்யப்பட்டவர்

விழுப்புரம் தனியார் பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்த சம்பவம். எங்கள் எல்லை இல்லை என மாறி மாறி வழக்கு பதிவு செய்ய தாமதிக்கும் காவல் நிலையங்கள்.

விழுப்புரம் நகருக்கு விழுப்புரத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமப்புறங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி பயின்றுவருகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் பேருந்து பயணித்தையே மேற்கொண்டு வருவது வழக்கம்.தினம் தோறும் ஏராளமான மாணவிகள் வந்து செல்கின்றனர். அந்த வகையில் நேற்று மாலை பள்ளி விட்டவுடன் ஒவ்வொருவரும் தங்கள் ஊருக்கு தங்கள் வசதிக்கேற்ப பேருந்துகளில் செல்வது வழக்கமான பேருந்துகளில் புரப்பட்டனர்.

விசாரணைக்கு

விழுப்புரத்தில் அப்படி மாணவிகள் ஒரு தனியார் பேருந்து மாலை நேரங்களில் வழக்கமாக பயணம் செய்து வந்திருந்த நிலையில் தினம் தோறும் அந்த பேருந்தில் பயணம் செய்யும் ஒரு இளைஞர் பள்ளி மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோரை பாலியல் சீண்டல் செய்து வருவது வழக்கமாக கொண்டுள்ளார். நேற்று அதே போன்று பாலியல் சீண்டல் செய்த போது பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அந்த இளைஞரை பிடித்து விழுப்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விழுப்புரம் தாலுக்கா காவல்துறையினர் தங்கள் எல்லைக்குள் இது வராது எனக் கூறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.அனைத்து மகளிர் காவல் நிலையமும் இந்த வழக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை சம்பவம் நடந்த இடம் விழுப்புரம் நகர காவல் நிலையம் எனவே அங்கு கொண்டு விடுங்கள் என்று அந்த இளைஞரை நகர காவல் நிலையத்தில் கொண்டு சேர்த்தனர்.

பாலியல் சீண்டல் செய்த நபர் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவலர்கள் அவர் குடிபோதையில் இருக்கிறார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தட்டிக் கழிக்கும் செயல் பொதுமக்களிடையே காவல்துறையின் மீதுள்ள நம்பிக்கை கேள்விக்குறியாக்கி உள்ளது. இறுதியாக விழுப்புரம் நகர காவல் நிலையத்தில் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.அங்கும் காவலர்கள் தங்களுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து எந்த உத்தரவும் வரவில்லை என பதிலளிக்கின்றனர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here