உதகை தலைக்குந்தா காந்திநகர் பகுதியில் கடந்த 20.11.2022 ஆம் தேதி 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அதேபகுதியை சேர்ந்த அஜித் என்பரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று உதகை மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் குற்றவாளி அஜித்திற்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கினார்.

நீலகிரி மாவட்டம், அடுத்த உதகை அடுத்தா தலைக்குந்தா, காந்திநகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதியின் 8 வயது மகள் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த 20.11.2022 ஆம் தேதி தலைக்குந்தா பகுதியில் உள்ள முனீஸ்வரர் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த நிலையில் விடுமுறை தினம் என்பதால் கூலித் தொழிலாளி தம்பதியின் 9 வயது மகளும் தனது தோழிகளுடன் திருவிழாவில் கலந்து கொண்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்துள்ளார்.

அப்போது காந்திநகர் பகுதியை சேர்ந்த கேரட் மூட்டை தூக்கும் தொழிலாளியான அஜித் (வயது 23) என்பவர் அந்த சிறுமியை வழிமறித்து, சிறுமியின் தாத்தாவிடம் அழைத்து செல்வதாக கூறி சிறுமியை அருகில் உள்ள வனபகுதிக்கு அழைத்து சென்று அங்கு சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் சிறுமியை மிரட்டி உள்ளார். இதனை அடுத்து 25.11.2022 ஆம் தேதி சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து சிறுமியின் தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனை அடுத்து சிறுமியின் தாயார் புதுமந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பின்னர் புகாரின் பேரில் புதுமந்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது அதே பகுதியை சேர்ந்த அஜித் என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குற்றவாளி அஜித்தை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த அஜித்தை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து இந்த வழக்கு உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கின் விசாரணையில் இறுதி தீர்ப்பை என்று மகிளா நீதிமன்ற நீதிபதி ஸ்ரீதரன் வழங்கினார். குற்றவாளி அஜித்திற்கு 32 ஆண்டுகள் சிறை தண்டனையும் 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளார்.