நீண்ட நாட்களாக LGBTQ எனப்படும் இருபாலீர்ப்பாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த ‘ஒரே பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்குவதற்கான மேல்முறையீட்டை’ உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வாதங்களைக் கேட்ட பின்னர் ஐந்து நீதிபதிகளை உள்ளடக்கிய உச்ச நீதிமன்றம் செவ்வாயன்று இந்த பிரச்சினையை பாராளுமன்றத்தால் தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது .
அதற்குப் பதிலாக ஒரே பாலின தம்பதிகளுக்கு சில உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க ஒரு குழுவை உருவாக்குவதற்கான அரசாங்க முன்மொழிவுக்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது.
நீதிமன்றம், நீதித்துறை மறுஆய்வு அதிகாரத்தைப் பயன்படுத்தி, குறிப்பாக சட்டமியற்றும் கொள்கையில் தலையிடும் விஷயங்களைத் தவிர்க்க வேண்டும், ”என்று தலைமை நீதிபதி தனஞ்சய யஷ்வந்த் சந்திரசூட் கருத்து தெரிவித்தார் .
மேலும் ஒரே பாலினத்தவர்களுக்கு அரசு சில சட்டப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும் என்று சந்திரசூட் கூறினார், “ஒரே பாலின தம்பதிகளுக்கு வழங்கப்படும் ‘பயன்கள் மற்றும் சேவைகளை’ மறுப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் . வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது ஒருவரின் வாழ்க்கையில் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்,” என்று அவர் கூறினார்.
சிலர் இதை தங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான முடிவாகக் கருதலாம். இந்த உரிமையானது , இந்திய அரசியலமைப்பின் 21வது பிரிவின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்திற்கான உரிமையின் அடிப்பகுதிக்கு செல்கிறது.
ஒரே பாலின மக்களின் உரிமையை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு ஹாட்லைன்கள் மற்றும் பாதுகாப்பான வீடுகளை நிறுவுதல் மற்றும் பாலின அடையாளம் ஆகியவற்றை உறுதிசெய்ய உரிய ஏற்பாடுகளை அரசு எடுக்க வேண்டும் .
ஒரே பாலினத்தவரின் அரசியலமைப்பு உரிமைகளை மீறுவதாக அவர்கள்உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் .
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி , இந்த மனுவை எதிர்த்தது, இந்த பிரச்சினையை பாராளுமன்றத்திற்கு விட வேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் தீர்ப்பு சமூக விழுமியங்களுக்கு “அழிவு” விளைவிக்கும் என்றும் வாதிட்டது.
ஓரின சேர்க்கையாளர்கள் கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்வதும், உடலுறவு கொள்வதும் , கணவன், மனைவி மற்றும் குழந்தைகள் என்ற இந்தியக் குடும்ப கலாச்சாரத்துடன் ஒப்பிட முடியாது,” என்று நீதிமன்றத்தில் அரசாங்கம் சமர்ப்பித்துள்ளது.
ஓரின சேர்க்கைக்கான கால தடையை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரத்து செய்து , செவ்வாய்கிழமை அன்று உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது .
2018 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஓரினச்சேர்க்கை குற்றமற்றதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பெரும்பான்மையான ஓரின சேர்க்கையாளர்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பாகுபாடுகளை எதிர் கொண்டு வருவதாக ஒரு ஓரின சேர்க்கையாளர் தெரிவித்தார் .
பாரம்பரிய விழுமியங்கள் மூலம் அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் ஆசியாவில், ஓரின சேர்க்கையாளர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் தாமதம் உள்ளது.
இதுவரை தைவானும் நேபாளும் மட்டுமே ஆசியாவில் ஒரே பாலினத்தை அங்கீகரிக்கும் முன்மாதிரி நாடுகளாக திகழ்கின்றது .
இந்த தடைகளை களைந்து உடனடியாக ஓரின சேர்க்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .