பொங்கல், குடியரசு தினவிழாவை யொட்டி விழுப்புரத்தில் மக்கள் கூடும் இடங்களில் மோப்ப நாய்களை வைத்து வெடிகுண்டு கண்டறியும் சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை அடுத்து வரும் குடியரசு தினம் வருதால் எவ்வித அசம்பாவிதங்களையும் தடுக்கும் வகையிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் கூடும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மேலும் வெடிகுண்டு கண்டிறியும் நிபுணர்களுடன் பஸ்நிலையங்களில் சோதனையில் ஈடுப்பட்டனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் போன்ற நகரங்களிலும் சுற்றுலாதலங்கள் போன்ற பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த இடங்களில் பேருந்து நிலையம், வழிபாட்டுதலங்கள் மக்கள் கூடும்.
பிரதான சாலைகள், மார்க்கெட்பகுதிகள், வழிபாட்டு தலங்கள்களில் வெடிகுண்டு கண்ட உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை விழுப்புரம் நடவடிக்கைகளை பலப்படுத்த மாவட்ட எஸ்பிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பேருந்துநிலையத்தில் வெடி குண்டு கண்டறியும் பிரிவு எஸ்ஐக்கள் வெங்கடேசன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட போலீசார் பேருந்துகளில் பயணிகளின் உடமைகளை வெடிகுண்டுகண்டறியும் மெட்டல்டிடெக்டர் கருவிகள் மூலம் சோதனை செய்தனர் மேலும் மோப்ப நாய் ராணி உதவியுடன் தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளிலும் சோதனை நடத்தப்பட்டது அதேபோல் மக்கள்கூடும் சாலைகளிலும் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
ரயில்நிலையங்களிலும் போலீசாரின் சோதனைக்கு பிறகே பயணிகள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ரயில்களிலும் பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் வழிபாட்டு தலங்கள், சுற்றுலாதளங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் சோதனை நடத்தி பாதுகாப்பை உறுதிசெய்த னர். தொடர்ந்து மாவட்ட எல்லைகளிலும் வாகனங் கள் சோதனைக்குப்பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டன.

விழாக்கால பண்டிகை, குடியரசுதினவிழாமுடியும் வரை போலீசார் இந்தசோத னையில் ஈடுபடஉள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் லக்கேஜ்கள் விடுதிகளிலும் சோதனை நடத்திய போலீசார் சந்தேகம் நபர்கள் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரின் அதிரடி சோதனையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.