பிரிவுக்குப் பிறகு உறவுக்கு வந்த கணவனைக் கொஞ்சுகிறாள் மனைவி என்ற கவிஞர் வைரமுத்து பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதி தனது பயணத்தை தொடங்கிய கவிஞர் வைரமுத்து தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியானார். இவர் 7 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருதை வென்றுள்ளார். ரஜினி, அஜித், கமல், விஜய் ஆகிய நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி , தனது திறமையை பாடல் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
இதைபோல், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்திலும் ஆக்டிவாக செயல்படக்கூடிய நபர். எந்த ஒரு பிரச்சனை நடந்தாலும், பண்டிகைகள் வந்தாலும் தனது கவிதை மூலமாக வெளிப்படுத்தி வருபவர் வைரமுத்து.
இன்று அவர் பிரிவுக்கு பிறகு கணவனைக் கொஞ்சும் மனைவியை பற்றி கவிதை மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளார்.அது என்னவென்றால்,
பிரிவுக்குப் பிறகு
உறவுக்கு வந்த கணவனைக்
கொஞ்சுகிறாள் மனைவி
“வெட்கம் விடைகேட்குதே”
என்கிறாள்
“கொச்சையான சொற்கள்
கொஞ்சம் செவிகேட்குதே”
என்கிறாள்
பாடல் பதிவைப் பாருங்கள்
இயக்கம் ராஜசேகர்
இசை ஜோகன்
படம் 13ஆவது அட்சக்கோடு
என்ற பாடலையும் எழுதி, வீடியோ மூலம் தனது பதிவினை பதிவிட்டுள்ளார். தற்போது இது வைரலாகி வருகிறது .