குஜராத் மாநிலம், அடுத்த ராஜ்கோட்டில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது ஜெய்ஸ்வால், ஷுப்மன் கில், பட்டிதார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதை அடுத்து, களமிறங்கிய மண்ணின் மைந்தன் ஜடேஜா, கேப்டன் ரோகித்துடன் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். தனது 11 ஆவது டெஸ்ட் சதத்தை நிறைவு செய்த ரோகித், டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

பின்பு ரோகித் 131 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது அடுத்த வந்த சர்ப்ராஸ் கான், இங்கிலாந்தின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். பின்பு ஆட்டம் நிறைவுபெறும் தருவாயில், ஜடேஜாவின் சிறு பிழையால் சர்ப்ராஸ் கான், 62 ரன்களில் ரன் அவுட் ஆனார்.

அப்போது ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 99 ரன்களுடன் சதத்தை எதிர்நோக்கி இருந்தார். அப்போது ஜடேஜா செய்த தவறால், சர்பராஸ் கான் ரன் அவுட் ஆனார். சர்பராஸ் கானின் ரன் அவுட்டுக்கு ரவீந்திர ஜடேஜா வருத்தம் தெரிவித்துள்ளார். அப்போது என்னுடைய தவறான அழைப்பால் அவுட் ஆனதற்கு வருந்துகிறேன் என்றும், சிறப்பாக விளையாடினீர்கள் என்றும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

இதற்கிடையே இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது தனது வாழ்நாளில் பெருமையான தருணம் என சர்பராஸ் கான் தெரிவித்துள்ளார். மேலும் ரன் அவுட் பற்றி பேசிய அவர்;- விளையாட்டில் அது சகஜம் என்று கூறினார்.

பின்பு நீண்ட நேரம் களத்தில் இருந்தால் ரன்கள் தானாக வரும் என ஆலோசனை வழங்கிய ஜடேஜாவுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் சர்பராஸ் தெரிவித்தார். அப்போது முதல் நாள் ஆட்ட நேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் சேர்த்துள்ளது.