பிரபல இந்தி வில்லன் நடிகர் சஞ்சய் தத். இவர் பிரபல கன்னட படமான ‘கே.ஜி.எஃப் 2’ படத்தில் முக்கிய வில்லனாக நடித்திருந்தார். மேலும் தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்திலும் நடித்து வருகிறார்.
தற்பொழுது இவர் கன்னடத்தில் உருவாகும் ‘கேடி’ படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பெங்களூரில் உள்ள மகடி ரோடு அருகே இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கேடி படத்தின் சண்டைக் காட்சிகள் பெங்களூரில் படமாக்கப்பட்டு வருகிறது . இதை படத்திற்கு பிரபல சண்டை இயக்குநர் ரவிவர்மா காட்சியை அமைத்துவருகிறார் .

கேடி பட சண்டைக்காட்சிகளில் தற்போது குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது . அந்தக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த சஞ்சய் தத், எதிர்பாராதவிதமாக படுகாயம் அடைந்தார். கண்ணாடி துண்டுகள் சிதறியதில் அவர் முகம், கை மற்றும் முழங்கையில் பலத்தக் காயம் ஏற்பட்டது.
உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஆரம்பக்கட்ட சிகிச்சைக்குப் பிறகு அவர் மும்பை திரும்பினார். அங்கு அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.