
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹாவில் 122 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, பெரியபட்டினம் பள்ளி வாசலில் இருந்து வான வேடிக்கைகள் வானில் வர்ண ஜாலமிட, குதிரைகள் நடனம், தாரை தப்பட்டைகள் முழங்க, அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடி ஊர்வலம் தர்ஹாவை மும்முறை வலம் வந்து,

பின்னர் தர்ஹா அருகே 50 அடி உயர மினாராவில் அதிகாலை 5:30 மணியவில் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தர்ஹா வந்தடைந்தது.இதனைத் தொடர்ந்து சந்தனக்கூடு நடைபெற பெரியபட்டினம் சந்தனக்கூடு வெகு சிறப்பாக நடைபெற்ற மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழாவைக் காண, ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.