கும்பகோணத்தில் சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி பல்வேறு நபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த நான்கு நபர்கள் காவல்துறையினரால் கைது.
கும்பகோணம் மேம்பாலம் சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் முல்லை நகரைச் சேர்ந்த அர்ஜுன் கார்த்திக் என்பவர் கடை நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 18 மாதத்திற்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் தரப்படும் என கூறி பல நபர்களிடம் பல கோடி ரூபாய் முதலீடு திரட்டியதாக கூறப்படுகிறது .
இவர்கள் கூறியவாறு பணம் தராததால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார்கள் அளித்தனர்.

இது தொடர்பாக நாச்சியார் கோவில் காவல் நிலையத்தார் விசாரணை நடத்தி வந்த நிலையில், மூடப்பட்டிருந்த சாய் கிரிப்டோ கன்சல்டன்சி நிறுவனத்தில் இருந்த கம்ப்யூட்டர்கள் மற்றும் முக்கிய ஆவணங்களைகடையின் பூட்டை உடைத்து திருவிடைமருதூர் டிஎஸ்பி ஜாபர் சித்திக் மற்றும் நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ரேகா ராணி உள்ளிட்ட காவல்துறையினர் இன்று கைப்பற்றி இந்த பண மோசடி செயலில் தொடர்புடைய,
A1.அர்ஜுன் கார்த்தி @ கார்த்தி த/பெ.சண்முகம் விவேகானந்த நகர் 1St கிராஸ் காரைக்கால் ரோடு கும்பகோணம்.
A2.இவான்ஜலின் அவிலா தெரஸ் க/பெ. ஜோசப் பிரான்சிஸ் 11/22, ஸ்டேட் பேங் காலனி கும்பகோணம்
A3.ராஜா த/பெ.குப்புசாமி No.12, மெயின்ரோடு,திருப்பணிப்பேட்டை,திருவிடைமருதூர்
A4.செல்வக்குமார் த/பெ. ராஜா No.12, மெயின்ரோடு,திருப்பணிப்பேட்டை, திருவிடைமருதூர்

சேர்ந்த ஒரு பெண் உள்பட நான் நான்கு பேர்களை காவல்துறையினர் கைது செய்து கும்பகோணம் குற்றவியல் நீதிபதி இளவரசி முன் ஆஜர் படுத்தினர் இவர்களை 26-10- 23 திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இந்த மாதிரி பண மோசடி நாம் ஆங்கங்கே பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம். எனவே மக்கள் விழிப்புணருவுடன் இருக்குமாறு நீதிபதி கேட்டுக்கொண்டார்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும்பாலோர் திருவாரூர் மாவட்டம் பொத்தக்குடி ,அத்திக்கடை பகுதியை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.