இரண்டு சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ளக்காதலன் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ரயில் நிலையத்தில் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுமிகள் வெகு நேரமாக சுற்றித்திரிந்தனர். இதை பார்த்த விழுப்புரம் ரயில்வே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே இரண்டு சிறுமிகளையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த அக்கா, தங்கை என்பது தெரியவந்தது. இதனையடுத்து இரண்டு பேரையும் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரயில்வே போலீசார் ஒப்படைத்தார். போலீசார் நடத்திய விசாரணையில் தங்களுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து கதறி அழுதபடி கூறினார். அது பற்றிய விவரம் பின்வருமாறு;

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறுமிகளின் தந்தை இறந்துவிட்டார். இதனை அடுத்து தாயின் அரவணைப்பில் இரண்டு சிறுமிகள் வாழ்ந்து வந்தனர். இதனிடையே சிறுமிகளின் தாய்க்கு திருவெறும்பூரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் உடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. ராஜேஷ் அடிக்கடி சிறுமிகளின் வீட்டிற்கு வந்து தாயுடன் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல ராஜேஷுக்கு இரண்டு சிறுமிகளின் மீது மோகம் ஏற்பட்டது. எனவே முதலில் இரண்டு சிறுமிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுக்க தொடங்கினார். இதை சற்றும் எதிர்பாராத சிறுமிகள் தங்களது தாயிடம் கூறினார்.

ஆனால் அவரோ அதை கண்டு கொள்ளவில்லை. கள்ளக்காதலை கண்டிக்கவும் இல்லை. இதை ராஜேஷ் தனது சாதகமாக பயன்படுத்தி கொண்டு இரண்டு சிறுமிகளையும் பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து இரண்டு சிறுமிகளும் தாயிடம் தெரிவித்தனர். அதன்பிறகும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் ராஜேஷின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்தது. இந்த கொடுமையை தாங்கிக்கொள்ள முடியாத இரண்டு பேரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சி ரயில் நிலையத்துக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சென்னை சென்ற ரயிலில் ஏறி விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் அங்கேயே சுற்றித்திரிந்தது என தெரியவந்தது.

இது குறித்து புகாரின் பேரில் ராஜேஷ் மற்றும் சிறுமிகளின் தாய் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் நிகழ்ந்த இடம் திருச்சி என்பதால் இந்த வழக்கை திருச்சிக்கு மாற்ற போலீசார் முடிவு செய்தனர்.