விழுப்புரம் ஆட்சியர் பெருந்திட்ட வளாககாவலர் அணி வகுப்பு மைதானத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ஆட்சியர் பழனி கலந்து கொண்டு தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து வானில் வண்ண, வண்ண பலூன்களை பறக்கவிட்ட அவர், திறந்த ஜூப்பில் சென்று காவல்துறை, ஊர்காவல்படை, தீயணைப்பு உள்ளிட்ட வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவு பரிசுகளை வழங்கி மரியாதை செலுத்தினார்.

பின்னர் பல்வேறு துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் முன்னாள் படை வீரர்கள் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூபாய் 50,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், தாட்கோ சார்பில் 2 பேருக்கு ரூபாய் 18,89,013 மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் 10 பேருக்கு ரூபாய் 78,850 மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அப்போது வேளாண்மைதுறை சார்பில் 10 பேருக்கு ரூபாய் 38,990 மதிப்பீட்டிலும், வேளாண்மை பொறியியல் துறை சார்பில் 3 பேருக்கு ரூ.11,33,900 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பேருக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பீட் டிலும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் 5 பேருக்கு ரூபாய் 2.50 லட்சத்திலும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2 பேருக்கு ரூபாய் 13,104 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 5 பேருக்கு ரூபாய் 26,340 மதிப்பீட்டில் என மொத்தம் 41 பயனாளிகளுக்கு ரூபாய் 35,05,197 மதிப்பீட்டில் ஆட்சியர் பழனி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதனை தொடர்ந்து பல்வேறு அரசுத் துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 281 அலுவலர்கள், பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழையும், குடியரசு தினவிழாவில் பங்கேற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆட்சியர் வழங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா, டி.ஐ.ஜி திஷாமித்தல், ரவிக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், சிவக்குமார்,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், துணைத்தலைவர் ஷூலாதேவிசேரன், மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், விழுப்புரம் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் தேசியக் கொடி ஏற்றினார். மாவட்ட ஊராட்சி செயலர் ஜோதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் நகராட்சியில் சேர்மன் சக்கரை தமிழ்செல்விபிரபு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். ஆணையர் ரமேஷ், துணைத்தலைவர் சித்திக் அலி, கவுன்சிலர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.