பிளாஸ்டிக் பைகளிலிருந்து துணிப் பைகளுக்கு மாறுவோம் என்று மனதின் குரல் 98வது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
மனதின் குரல் நிகழ்ச்சியின் 98வது நிகழ்ச்சி, சுய உதவிக் குழுவை நடத்தும் ஒடிசாவின் கேந்திரபாடா மாவட்டத்தைச் சேர்ந்த கமலா மொஹரானாவின் பங்களிப்புகளை பிரதமர் எடுத்துரைத்தார். பால் பாக்கெட்டுகள் மற்றும் இதர பிளாஸ்டிக் பேக்கிங் பொருட்களில் இருந்து கூடைகள், மொபைல் ஸ்டாண்டுகள் போன்ற பல பொருட்களை இந்தக் குழுவில் உள்ள பெண்கள் உருவாக்குகிறார்கள். இது அவர்களுக்கு நல்ல வருமானம் பெற்றுத் தருகிறது.
அதோடு தூய்மையை உறுதி செய்கிறது இதனால் பெரிய அளவில் சம்பாதிக்க முடியும். நாம் நினைத்தால் தூய்மை இந்தியாவுக்கான பெரிய பங்களிப்பை செய்ய முடியும். குறைந்த பட்சம் நாம் அனைவரும் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப் பைகளைப் பயன்படுத்துவதாக உறுதிமொழி எடுக்க வேண்டும். உங்கள் உறுதியான தீர்மானம் உங்களுக்கு எந்தளவு திருப்தியை அளிக்கும் என்பதை நீங்களே உணர முடியும் என்பதோடு மற்றவர்களுக்கும் ஊக்கமளிக்கும்.

பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை உரையான மனதின் குரல், அக்டோபர் 3, 2014 அன்று முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. ஏப்ரல் 30, 2023 அன்று 100 வது நிகழ்ச்சியை எட்டுகிறது. இதுவரையிலான 99 நிகழ்ச்சிகளில், மிகச் சிறப்பான சேவையாற்றிய 700 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மற்றும் சுமார் 300 அமைப்புகளைப் பற்றி பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். வானொலி நிகழ்ச்சி தேசத்தின் மனநிலையை பிரதிபலிப்பதோடு மட்டுமல்லாமல், நேர்மறையான மாற்றத்திற்கான மக்களின் நடவடிக்கைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.
80வது நிகழ்ச்சியில் இந்தூரைப் பற்றிப் பேசிய பிரதமர், “தூய்மை இந்தியா திட்டம்” பற்றி பேசும் பொழுது, இந்தூர் தூய்மையில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி உள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். இந்தூர் பல ஆண்டுகளாக “தூய்மை இந்தியா தரவரிசையில்” முதல் இடத்தில் உள்ளது என்றார்.
நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் பல்வேறு முயற்சிகளை எடுத்துரைத்த பிரதமர், “காக்கிநாடாவில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஒடிசாவில் மூன்று நாட்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கடல் தூய்மை மற்றும் கடல் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுத்தனர். இது மக்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது.
தூய்மை இந்தியா இயக்கம், பிரதமரின் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது. மனதின் குரல் நிகழ்ச்சிகளில் இது அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளது. யுவ ஸ்வச்தா ஏவம் ஜனசேவா சமிதியாக இருந்தாலும் சரி, பரிவர்தனுக்கான இளைஞர்களாக இருந்தாலும் சரி, கேந்திரபாதாவைச் சேர்ந்த கமலா மோஹரனாவாக இருந்தாலும் சரி, ருத்ர பிரயாகின் மனோஜ் பைஞ்வாலாக இருந்தாலும் சரி அனைவரது பங்களிப்பும் பேசப்பட்டது. ஹரியானாவின் பிவானியில் இளைஞர்களின் பங்களிப்பை, 2023 பிப்., 26 அன்று தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் குறிப்பிட்டார். “ஹரியானாவின் பிவானி இளைஞர்களின் தூய்மை பிரச்சாரம் எனது கவனத்தை ஈர்த்தது, அவர்கள் தங்கள் நகரத்தை முன்மாதிரியாக மாற்ற முடிவு செய்து நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் குப்பைகளை அகற்றி நகரத்தில் தூய்மை இயக்கங்களை நடத்துவதற்காக யுவ ஸ்வச்தா ஏவம் ஜன்சேவா சமிதி என்ற அமைப்பை உருவாக்கினர்.” என்றார்.

மின்னணுக் கழிவுகளை அகற்றுவது குறித்து 97வது நிகழ்ச்சியில், மின்னணுக் கழிவுகளை முறையாக அகற்றாவிட்டால், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். ஆனால், கவனமாகச் செய்தால், மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாட்டின் சுழல்ப் பொருளாதாரத்தில் இது ஒரு பெரிய சக்தியாக மாறும். பிரதமர் அவர்கள் சில மின்னணுக் கழிவு மறுசுழற்சியாளர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்.
பிரிண்டட் சர்க்யூட் போர்டுகளில் இருந்து விலைமதிப்பற்ற உலோகங்களைப் பிரித்தெடுப்பதற்கான உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்கிய பெங்களூருவின் இ-பரிசரா, மொபைல் செயலி மூலம் மின்னணுக் கழிவுகளை சேகரிக்கும் அமைப்பை உருவாக்கிய மும்பையைச் சேர்ந்த எகோரெகோ, கபடிவாலா என அனைவரும் பிரதமரின் பிரபலமான வானொலி நிகழ்ச்சியில் பேசப்பட்டனர். அவர்களின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், “அவர்கள் அனைவரும் இந்தியாவை உலகளாவிய மறுசுழற்சி மையமாக மாற்ற உதவுகிறார்கள்” என்று கூறினார்.
பல்வேறு சுயஉதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற குழுக்களின் முயற்சிகள் மற்றும் முன்முயற்சிகளால் மகிழ்ச்சியடைந்து, 93வது நிகழ்ச்சியில் பெங்களூரில் இருந்து யூத் ஃபார் பரிவர்தன், மீரட்டின் ஜகாட் பிரச்சாரம் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பிற முயற்சிகள் குறித்து பிரதமர் பகிர்ந்து கொண்டார்.
நகர்ப்புற மக்களின் பங்களிப்பைப் பாராட்டிய பிரதமர், மனதின் குரல் நிகழ்ச்சி ஒன்றில், “தூய்மை இந்தியா இயக்கம்” இன்று ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் உறுதியாக வேரூன்றியிருக்கிறது. இந்த வெகுஜன இயக்கம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதில் இருந்து பல தனித்துவமான முயற்சிகளை மக்கள் மேற்கொண்டுள்ளனர். சமூகத்திலும், கிராமங்களிலும், நகரங்களிலும் மற்றும் அலுவலகங்களிலும் கூட இந்த பிரச்சாரம் எல்லா வகையிலும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30, 2023 அன்று மனதின் குரல் 100வது நிகழ்ச்சியை எட்டும்போது, தூய்மை போர்வீரர்களின் ஊக்கமளிக்கும் கதைகள் அனைவரையும் ஊக்குவித்து வருகின்றன.