சென்னையில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு நிவாரணம் பரிசீலிக்கப்படும்-அமைச்சர் உதயநிதி

2 Min Read
அமைச்சர் உதயநிதி

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவர்கள் ரேசன் அட்டைகள் சொந்த ஊர் முகவரிலேயே இருக்கும். அப்படியானவர்களுக்கு எவ்வாறு நிவாரண தொகை கிடைக்கும் என்ற சந்தேகம் நிலவியது.ரேசன் அட்டை இல்லாதவர்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னையில் வசிப்பவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை அளிக்கும் விதமாக பதிலளித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட கனமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளநீர் புகுந்ததில் வீடுகள், வீடுகளில் இருந்த பொருட்கள், வாகனங்கள் சேதமடைந்தன. இந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ,000 நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

நிவாரணம்

இது தொடர்பான அரசாணையில், சென்னையில் உள்ள அனைத்து வட்டங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் வட்டங்களிலும் திருப்போரூர் வட்டத்தில் 3 வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் வட்டம் முழுமைக்கும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில், மேவலூர்குப்பம், சிவன்தாங்கல், கட்சிப்பட்டு ஆகிய 3 வருவாய் கிராமங்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஆவடி, பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் வட்டம் என 6 வட்டங்களில் வசிப்போருக்கு நிவாரணம் கிடைக்க இருக்கிறது.

அதுமட்டுமின்றி, மிக்ஜாம் புயலால், 2 நாட்களுக்கு மேல் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண நிதி பெற தகுதியானவர்கள் என்று அரசாணையில் வரையறுக்கப்பட்டுள்ளது. பொதுத்துறை உயர் அலுவலர்கள்,வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் வங்கிக்கணக்கு விவரங்களை, உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதியில் அரசுத்துறை ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோருக்கு மட்டும் வங்கிக்கணக்கில் ரூ.6,000 வரவு வைக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அமைச்சர்

நிவாரணத் தொகை பெறுவதற்கான டோக்கன்கள் விநியோகமும் தொடங்கியது. ரேசன் கடை ஊழியர்கள் வீடு தேடி சென்று டோக்கன்களை விநியோகிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதே நேரத்தில், ரேசன் அட்டை இல்லாதவர்கள், பணி நிமித்தமாக சென்னையில் வசிப்பவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை. குறிப்பாக பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் சென்னையில் வசித்து வரும் நிலையில், அவர்கள் ரேசன் அட்டைகள் சொந்த ஊர் முகவரிலேயே இருக்கும். அப்படியானவர்களுக்கு எவ்வாறு நிவாரண தொகை கிடைக்கும் என்ற சந்தேகம் நிலவியது.

இது தொடர்பாக, சென்னையில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்குமே நிவாரணத் தொகை உறுதியாக கிடைக்கும் என அமைச்சர் உதயநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

அது மட்டுமன்றி, முதற்கட்டமாகவே தற்போது நிவாரணம் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், ரேசன் அட்டை இல்லாதவர்கள், சொந்த ஊரில் பெயர் உள்ளவர்கள் போன்ற அனைவருக்குமே நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலித்து உரிய முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார்.

Share This Article
Leave a review