- திருவையாற்றில் காவல்துறையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவல் நிலையத்தில் வழக்கு ஒன்று தொடர்பாக ஆவிக்கரை ஊரை சேர்ந்த சுமன் 25 வயது என்று இளைஞரை இன்று காலையில் அவர் வீட்டில் இருந்து காவல்துறையினர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுமனின் தந்தை சசிகுமார் மனைவி மகேஸ்வரி மற்றும் உறவினர்கள் திருவையாறு காவல் நிலையத்திற்கு சென்று
அழைத்து சென்ற மகனை காணவில்லை என்று கேட்டுள்ளனர் இதற்கு காவல்துறையினர் உரிய பதிலை தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது
இந்த நிலையில் திருவையாறு கடைவீதியில் உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால் போக்குவரத்து ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
விரைந்து வந்த டி எஸ் பி அருள்மொழி அரசு உறவினனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அதனை அடுத்து சாலை மறியலை கைவிட்டனர்.