புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்துக்கு ரயில் கட்டணம் குறைப்பு – ரயில்வே நிர்வாகம்..!

1 Min Read

கொரோனா காலத்தில் உயர்த்தப்பட்ட பயணிகள் ரயில் கட்டணத்தை 4 ஆண்டுகளுக்கு பிறகு குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

- Advertisement -
Ad imageAd image

அப்போது சாதாரண பயணிகள் ரயில்களில் உயர்த்தப்பட்ட கட்டணம் குறைக்கப்பட்டு மீண்டும் பழைய கட்டணம் பயணிகளுக்கு ரயில் கட்டணம் வசூலிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ரயில் கட்டணம் குறைப்பு

அதன்படி விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் பாசஞ்சர் ரயிலில் ஏற்கனவே 30 ரூபாய் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அப்போது பயணிகளுக்கு ரயில் கட்டணம் ரூ.20 குறைக்கப்பட்டு, 10 ரூபாயாக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு செல்லும் சாதாரண பயணிகள் ரயில் கட்டணமும் ரூ.45 ஆக குறைந்துள்ளது என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. முதல்கட்டமாக 200 கிமீ சுற்றளவில் செல்லும் பயணிகள் ரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே நிர்வாகம்

அப்போது உடனடியாக விலை குறைப்பு அமலுக்கு வந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

இதேபோல் விழுப்புரத்தில் இருந்து தாம்பரத்திற்கு 60 ரூபாய் வசூலிக்கப்பட்ட கட்டணம் தற்போது ரூ.35 ஆகவும், ரூ.20 குறைக்கப்பட்டு 10 மயிலாடுதுறைக்கு ரூ.50 வசூலிக்கப்பட்ட கட்டணம் ரூ.30 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அப்போது காட்பாடிக்கு ரூ.65 லிருந்து 40 ஆக ரயில் கட்டணம் குறைந்துள்ளது.

பயணிகள் மகிழ்ச்சி

ரயில்வேதுறையின் இந்த நடவடிக்கைக்கு புதுச்சேரி ரயில் பயணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும் முதியேர் கட்டண சலுகையையும் நடைமுறைக்கு மத்திய அரசு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 91 பயணிகள் ரயிலில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a review