ஐபிஎல் தொடரிலேயே மிகவும் கடினமான பணி என்றால், அது ஆர்சிபிக்கு ரசிகராக இருப்பது தான். கிறிஸ் கெயில், டிவில்லியர்ஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் போன்ற பல ஜாம்பவான்கள் விளையாடியும், ஒரு முறை கூட கோப்பையை வாங்கியது கிடையாது.
தென்னாப்பிரிக்க அணி சர்வதேச கிரிக்கெட்டில், எப்படியோ அதைவிட மோசம் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி. 213 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தும், அதனை எதிர்கொண்டு விளையாடிய லக்னோ அணி 105 ரன்களுக்கு 5 விக்கெட்டை இழந்தும், அந்த அணியை வெற்றி பெற விட்டது என்றால், அது கொடுமை தானே.
விராட் கோலி கேப்டனாக இருந்த வரை ஆர்சிபி கோப்பையை வெல்லவில்லை. சரி, புதிய கேப்டனாக டுபிளஸிஸ் செயல்படும் போதாவது, ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று பார்த்தால் வெற்றி பெற வேண்டிய போட்டியில் எல்லாம் தோற்றுவிடுகிறார்கள்.

நேற்றைய ஆட்டத்தில் கடைசி பந்துக்கு ஒரு ரன் தேவைப்பட்ட போது, ஹர்சல் பட்டேலுக்கு மான்கட் செய்து போட்டியை சமன் செய்து. சூப்பர் ஓவருக்கு கொண்டு செல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால்,, அவர் மான்கட்டை கூட சரியாக செய்யாமல் தடுமாறிவிட்டார். சரி விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் கடைசி பந்தை பிடிக்க முடியாமல் தடுமாறிவிட்டார்.
இதனை பயன்படுத்தி கொண்டு லக்னோ வீரர்கள் ஒரு ரன்களை ஓடி எடுத்துவிட்டனர். இதன் மூலம் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இந்த தோல்வியை தாங்கி கொள்ள முடியாத ஆர்சிபி ரசிகை ஒருவர் மைதானத்திலேயே கதறி அழுதார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரில் ஆர்சிபி ரசிகர்களின் கதை இப்படி தான் ஒவ்வொரு சீசனும் இருப்பதாக மற்ற அணி ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகின்றனர்.