இந்திய மக்கள் மத்தியில் மிகவும் வெற்றிப்பெற்ற தளமாக இருக்கும் யூபிஐ மூலம் புது புது சேவைகளை மக்களுக்கு அளித்து வருகிறது ரிசர்வ் வங்கி.
இந்த நிலையில் யூபிஐ சேவை தளத்தில் இது நாள் வரையில் மக்கள் தங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு
கணக்கில் இருக்கும் பணத்தை கொண்டு பேமெண்ட் செய்தும்,
பொருட்கள் மற்றும் சேவையை பெற்று வந்தனர்.
போகும் இடமெல்லாம் டிஜிட்டல் என்று காய்கறி கடை தொடங்கி சாப்ட்வேர் கம்பெனி ஊழியர் வரை இந்த UPI செய்யும் வேலை அதிகம்.
இது ஒருபுறம் இருக்க,
சில மாதங்களுக்கு முன்பு ஆர்பிஐ யூபிஐ கணக்கில் மக்கள் தங்களுடைய கிரெடிட் கார்ட்களை இணைக்கப்பட்டு பேமெண்ட் செய்யும் சேவையை அறிமுகம் செய்தது.
இதன் மூலம் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் ஒரு கிரெடிட் கார்டு வாயிலாக பணத்தை யூபிஐ வாயிலாகவே செலுத்த முடியும்,
இது மாத கடைசியில் தடுமாறும் பலருக்கு பெரிய அளவில் உதவி வருகிறது.

இதற்கு அடுத்த கட்டமாக இன்று நடந்து முடிந்த ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டத்தில்,
ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் யூபிஐ சேவை தளத்தை பயன்பாடுகளை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக,
இனி யூபிஐ வாயிலாக ஒரு வாடிக்கையாளருக்கு வங்கியில் முன்கூட்டியே ஒப்புதல் அளிக்கப்பட்ட கடன்களை யூபிஐ வாயிலாக பயன்படுத்திக்கொள்ள முடியும்
என ஆர்பிஐ கவர்னர் தெரிவித்தார்.
அதாவது ஒரு வங்கி அதன் கணக்கு உரிமையாளர்களுக்கு கடன் அளிக்கும் சேவையை பல வகையில் கொடுக்கிறது. இதில் முக்கியமானது இந்த pre-sanctioned credit lines,
இதில் ஒப்புதல் அளிக்கப்படும் கடன் தொகையை யூபிஐ வாயிலாகவே பயன்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது,
இதை செயல்படுத்த வங்கிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

நாணய கொள்கை கூட்டம் முடிந்த பின்பு செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய ஆர்பிஐ உயர்மட்ட அதிகாரிகளிடம்,
இந்த UPI – pre sanctioned credit lines இணைப்பு BNPL திட்டத்தை விரிவாக்கும் முறையா என்று கேட்டதற்கு,
இதற்கும் BNPL திட்டத்திற்கும் எவ்விதமான தொடர்புமில்லை.
கடனை வழங்குவது தனியார் நிதி சேவை நிறுவனங்கள் இல்லை, தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தான்.
இப்படியிருக்கையில் BNPL திட்டத்திற்கும் இதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை என்று கூறினார்கள்.இந்தியாவில் டிஜிட்டல் வங்கி சேவை நாளுக்கு நாள் மேம்பட்டு வரும் வேளையில் மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு அனைத்து பிரிவுகளிலும்,
வழிகளிலும் நிதியுதவியும், நிதி சேவைகளையும் கிடைப்பதை முக்கியமான இலக்காக கொண்டு இயங்கி வருகிறது.
இந்த நிலையில் UPIன் கீழ் புதிய சேவையை அறிமுகம் செய்யப்பட்டது என்பது வரவேற்க்கத் தக்கதே.