ராசிபுரம் அருகே தனியார் பேருந்து வளைவில் திரும்பிய போது பேருந்தில் இருந்த பெண் தூக்கி வீசப்பட்டதில், பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில், படுங்காயுடன் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதி. பதை பதைக்கும் சிசிடிவி காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், அடுத்த ராசிபுரம் அருகே ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாரதா. இவர் தனது மகள் திருமணத்திற்காக சேலம் மாவட்டம், இளம்பிள்ளைக்கு சென்று துணி எடுத்து விட்டு மீண்டும் மாலை சொந்த ஊருக்கு தனியார் பேருந்தில் திரும்பியுள்ளார்.

அப்போது ராசிபுரம் அருகே உள்ள காக்காவேரி பகுதி வளைவில் தனியார் பேருந்து திரும்பிய போது பேருந்தில் இருந்த சாரதா எதையும் பிடிக்காமல் நின்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தூக்கி வீசப்பட்டார்.
பின்னர் தனியார் பேருந்து நிறுத்திய ஓட்டுனர் மற்றும் பயணிகள் உடனடியாக சென்று பார்த்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி படுகாயம் அடைந்த சாரதாவை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் அனுப்பி வைக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தனியார் பேருந்தில் இருந்து பெண் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சி பார்ப்போரை பெரும் அதிர்ச்சியில் உறைய வைக்கும் விதமாக உள்ளது.