நாமக்கல் மாவட்டம் அடுத்த ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியில் நடைபெறும் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஆலய தேர் திருவிழாவில் சாட்டையலும், முறத்தாலும் , உலக்கையாலும்,பேய் பிடித்த பெண்களை காட்டேரி வெளுத்து வாங்கும் வினோத திருவிழா இப்பகுதியில் மிகவும் வரவேற்பு பெற்றது.
ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு கிராமத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஸ்ரீ செல்லியம்மன் ஸ்ரீ மாரியம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளது. கடந்த மாதம் 17.4.2024 ஆம் தேதி துவங்கிய தேர்த்திருவிழாவானது 29.5.2024 வரை நடைபெறும்.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் காட்டேரி ஓட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. உடல் முழுவதும் கருப்பு வண்ணம் பூசி காட்டேரி வேடம் அணிந்த நபர் ஒருவர் வீதி வீதியாக வலம் வருவது வழக்கம்.
அப்போது பில்லி சூனியம் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் வீடுகளையும், பேய் பிடித்ததாக கூறப்படும் பெண்களையும் கண்டறிந்து முறத்தாலும், சாட்டையாலும், உலக்கையாலும் விரட்டி விரட்டி அடித்து தீய சக்திகளை விரட்டுவது இங்கு பல ஆண்டுகளாக வழக்கத்தில் உள்ளது.

இந்த வினோத திருவிழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. பல ஆண்டுகளாக நடைபெறும் இந்த திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அப்போது இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் கடந்த 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இரண்டு ஆண்டுகளாக இந்த திருவிழா நடைபெறும் நிலையில் ஊர் மக்கள் அனைத்து செல்வங்களையும் பெற்று,

தீய சக்திகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க இந்த காட்டேரி ஓட்டுதல் நிகழ்ச்சி இது விமர்சையாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அனைவரும் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.