நாடாளுமன்ற தேர்தல்
தேர்தல் தேதி அறிவிகப்பட்டதிலிருந்து பல வித்தியாசமான நிகழ்வுகள் நடந்து வருவதை நாம் அன்றாடம் பார்த்து வருகிறோம்.கோவையில் ராமர் படத்தை கொடுத்து வாக்கு சேகரித்த பா.ஜ.க; வழக்கறிஞர் ராமரையும் தேர்தலில் ஈடுபடுத்தி விட்டனர்.தாமரை சின்னத்துடன் கூடிய ராமர் படம் கொடுத்து வாக்கு சேகரித்த பா.ஜ.க வழக்கறிஞர் மீது காவல்துறையில் புகார்அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்திற்கு பாரத பிரதமர் மோடி இது வரை எட்டு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்து சென்று விட்டார்.பாஜக வினர் பல விதமாக வக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறனர்.அதில் ராமர் படம் ஒருவிதம்.

ராமர்படம்
கோவை பந்தய சாலை பகுதியில் ராமர் படத்தை கொடுத்து மத ரீதியில் வாக்கு சேகரித்த பா.ஜ.க.,வினரை தடுத்து நிறுத்துமாறு வழக்கறிஞர் ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் நேற்று மாலை கோவை பந்தயசாலை காஸ்மோபோலிடன் கிளப் அருகில் பா.ஜ.க.,வினரால் நடைபயிற்சி செல்பவர்களுக்கு தாமரை சின்னத்துடன் கூடிய ராமர் படம் வழங்கப்பட்டது.
தாமரை சின்னம்
தாமரை சின்னம் பதித்த ராமர் படத்தை பொதுமக்களுக்கு கொடுத்து பா.ஜ.கவினர் வாக்குசேகரித்த நிலையில், அங்கு வந்த வழக்கறிஞர் லோகநாதன் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினரிடம் தேர்தல் பிரச்சாரத்தில் மத துஷ்பிரயோகம் செய்யக்கூடாது, கடவுள்களை முன்நிறுத்தகூடாது என்ற விதிமுறை இருக்கும் போது, அனைத்து சமுதாய மக்களும் நடைபயிற்சி மேற்கொள்ளும் பந்தய சாலை பகுதியில் ராமர் படத்தை விநியோகித்து வருகின்றனர் என புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் விசாரணை
இதைத்தொடர்ந்து பாஜகவினரிடம் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராமர் படங்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கறிஞர் லோகநாதனிடம் புகார் பெற்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவருகிறது.ராமர் படம் பிஜேபியினருக்கு மட்டும் சொந்தமானதில்லை எனவே அதை ஒரு சாரார் மட்டும் எப்படி பயன்படுத்த முடியும் என்பதுதான் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.