மழை மற்றும் பனியாள் கருகிப் போகும் மலர்கள் – விவசாயிகள் ஆதங்கம்..!

3 Min Read

மழை மற்றும் பணியாள் கருகிப் போகும் மலர்கள் கடன் வாங்கி செலவழித்த பணம் வீண் விவசாயிகள் ஆதங்கம் நிவாரணம் வழங்க வேண்டும் என முதல்வருக்கு கோரிக்கை.

- Advertisement -
Ad imageAd image

தமிழகத்தின் குட்டி ஹாலந்த் என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை இப்பகுதியில் மல்லிகை, முல்லை, கனகாம்பரம், செண்டுமல்லி, ரோஜா உள்ளிட்ட அனைத்து மலர்களும் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. மதுரை மல்லி என்று அழைக்கப்படுவது மதுரையில் அல்ல நிலக்கோட்டையில் மலரும் மல்லிகையை தான் அப்படி மல்லிகைக்கு பெயர் போன நிலக்கோட்டையில் தற்போது மல்லிகை விவசாயிகளின் வாழ்வாதாரம் பூக்களால் மிகவும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்தாலே மல்லிகைப்பூ செடியிலேயே கருகி விடுவதாகவும், அதேபோல் தற்போது மல்லிகை பூக்களுக்கு ஐந்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுவதால் சாதாரண நேரத்தில் ஒரு ஏக்கருக்கு 10 கிலோ பூ பூத்தால் தற்போது ஒரு கிலோ பூ தான் பூக்கிறது.

மழை மற்றும் பனியாள் கருகிப் போகும் மலர்கள்

அதேபோல் ஒரு ஏக்கருக்கு பூக்கள் பூத்து எடுக்கும் வரை அந்த 45 நாட்களுக்கு மட்டும் சுமார் ஐந்து முறை மருந்து தெளிக்க வேண்டிய உள்ளது. ஒரு முறை மருந்து தெளிப்பதற்கு நான்காயிரம் ரூபாய் மருந்து ஆயிரம் ரூபாய் கூலி என செலவிடுவதாகவும் 45 நாட்களில் சுமார் 25 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் அதேபோல் குடும்பத்தோடு வேலை செய்தும் கூலியாக்களை நான் ஒரு ரூபாய் முதல் 500 ரூபாய் வழங்கி வரவழைத்து பூக்களை பாதுகாத்து வந்தாலும் பூச்செடிகளில் மிகப்பெரிய அளவில் தற்போது வருமானம் இல்லை தமிழக விவசாய துறையோ வேளாண்மை துறையோ தோட்டக்கலை துறையும் எந்த அதிகாரிகளும் வந்து பார்ப்பதில்லை எந்த ஒரு பயன்களும் வருவதில்லை என்று கூறுகின்றனர், விவசாயிகள். மேலும் விவசாயிகள் கூறும் பொழுது பல்லாயிரம் ஏக்கர் மலர்களை விவசாயம் செய்து வருகிறோம். ஆனால் எங்களது வாழ்வு மலர் போல் மணக்கவில்லை தோளில் போட்டுள்ள துண்டு கூட கிழிந்த துண்டு தான் போட்டு வரும் சூழ்நிலை உள்ளது.

மழை மற்றும் பனியாள் கருகிப் போகும் மலர்கள்

இதனை தொடர்ந்து, 20000 ரூபாய் செலவு செய்து விவசாயம் செய்தால் 30 ஆயிரம் ரூபாய் வருவாய் வந்தால் தான் எங்களது குழந்தைகள் முதல் அனைவரையும் பாதுகாக்க முடியும் கல்வி திருமணம் உள்ளிட்ட அனைத்தையும் செய்து தர முடியும் எங்களுக்கு நோய்வாய் பட்டாலும் மருத்துவமனைக்கு செல்ல முடியும் ஆனால் இருபது ஆயிரம் ரூபாய் செலவு செய்து 10,000 ரூபாய் வருமானம் வந்தால் வீட்டில் உள்ள பெண்களின் மூக்குத்தி முதல் அண்டா குண்டா வரை அடகு வைத்து செலவு செய்த அனைத்து பணமும் வீணாகி கடனாளியாகவே மாறி வருகிறோம். தொடர்ந்து விவசாயத்தை நம்பி வாழ்ந்து வரும் விவசாயிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை அறிவிப்பதாக தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் கடை கோடியில் உள்ள எங்களுக்கெல்லாம் எந்த ஒரு மானியமோ திட்டங்களோ அல்லது இலவச உரமோ எதுவுமே கிடைப்பது கிடையாது. ஆற்றில் நேராக தண்ணீர் செல்வது போல் மானியம் யாரிடம் செல்வது என்று தெரியவில்லை. எங்களைப் போல் உள்ளவர்களுக்கு அரசின் திட்டங்கள் சேர வேண்டும்.

பொதுமக்கள்

ஆனால் விவசாய அதிகாரிகளோ, விவசாயத் துறையினரோ யாரும் எங்களை வந்து கண்டு கொள்வதில்லை. தொடர்ந்து விவசாயத்தை மட்டுமே பரம்பரையாக செய்து வரும் எங்களுக்கு தற்போது விவசாயத்தின் காரணமாக மிகப்பெரிய கடனாளியாகவே மாறி வருகிறோம். மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் தலையிட்டு பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகள் எவ்வாறு பாதிக்கின்றனர். அந்த பயிருக்கு என்ன முறையில் மருந்துகள் வைத்தால் பாதுகாக்க முடியும் என்று நேரடியாக வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடர்ந்து விவசாயிகளை வேளாண்துறை அதிகாரிகள் புறக்கணித்தே வந்தால் முற்றிலுமாக விவசாயம் அழிந்துவிடும். ஆகவே தமிழக முதல்வர் தலையிட்டு நிலக்கோட்டை சுற்றுப்பகுதியில் உள்ள அனைத்து விவசாயிகளையும் பாதுகாக்க வேண்டும். மல்லிகை விவசாயிகள் தற்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய நிவாரணமும் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

Share This Article
Leave a review