பச்சிளம் குழந்தையை குழிக்குள் போட்டு கொலை.! திருவள்ளூரில் பரபரப்பு.!

0
41
இறந்த பச்சிளம் குழந்தை

தகாத உறவு காரணமாக பிறந்த பச்சிளம் குழந்தையை குழிக்குள் போட்டு மேலே மண் கற்களை போட்டும்  கொலை செய்த கொடூர தாய்.

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் ஊராட்சி கொசவன்பாளையம் பகுதியில் உள்ள சுடுகாடு அருகே சுமார் 10 அடிக்கும் மேல் ஆழம் உள்ள வறண்ட குழியில் இருந்து குழந்தை அழுகுரல் கேட்பதாக அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது குழிக்குள் பச்சிளம் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக  அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் லோகநாதனுக்கு தகவல் கொடுத்ததின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் காவல்துறையினருக்கு அளித்த தகவல் அடிப்படையில்
விரைந்து வந்த காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் வறண்ட சுமார் 10அடி ஆழத்திற்க்கு மேல் உள்ள குழியில் இருந்து தொப்புள் கொடியுடன் முகத்தில் சிறு சிறு ரத்த காயங்களுடன் இருந்த குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த  குழந்தை யாருடையது என்பது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த லதா என்பவர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது கணவர் சங்கர் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இதை அடுத்து லதாவிற்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளது அதனால் கர்ப்பமான நிலையில் குழந்தையை பெற்று அதனை யாருக்கும் தெரியாதவாறு அருகில் உள்ள குளத்தில் வறண்ட நிலையில் சுமார் 10அடிக்கு மேல் உள்ள குழியில் போட்டு மண் கட்டிகளை மேலே போட்டுக் கொள்ள முயற்சி செய்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் மக்கள் நடமாடிக் கொண்டிருக்கவே அப்படியே விட்டுவிட்டு சென்ற நிலையில் குழந்தையை மீட்டு சிகிச்சை அளிக்கப்பட்டும், ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக முதல் கட்ட காவல்துறையின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து காவல்துறையினர் லதா”வை கைது செய்து கள்ளக்காதலன் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் கணவன் இறந்ததால் தகாத உறவால் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த குற்றத்திற்காக தாயை கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் திருவள்ளூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here