பஞ்சாப் : செவ்வாய்க்கிழமை இரவு அன்று பக்கத்து வீட்டுக்காரிடம் இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (IISER) விஞ்ஞானிஅபிஷேக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் .
ஐஐஎஸ்இஆர்-ல் ஆராய்ச்சியாளராக இருந்த அபிஷேக் ஸ்வர்ன்கர் (39), தனது இருசக்கர வாகனத்தை வாகனத்தை நிறுத்துவத்தில் அவரின் அண்டை வீட்டில் வசிக்கும் மோன்டி என்பவருடன் நீண்ட நாட்களாக வாய் தகராறு இருந்து வந்துள்ளது . இதேபோல் நேற்றும் அபிஷேக் மற்றும் மோன்டி ஆகிய இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் , பின்பு மோதலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், அபிஷேக் தனது வாகனத்தை ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறார். அங்கு ஏற்கெனவே சிலர் நின்றுகொண்டிருக்கிறார்கள். அபிஷேக் வாகனம் நிறுத்த மோன்டி எதிர்ப்பு தெரிவிக்கிறார். சிறிய வாக்குவாதத்துக்கு பின்பு மோன்டி அபிஷேக்கை கீழே தள்ளி விட, அதில் நிலைதடுமாறி விழும் அபிஷேக் பின்பு எழவே இல்லை. அருகில் இருந்த சிலர் அவர் எழுவதற்கு உதவி செய்த போதும் அவர் மீண்டும் நிலை குலைந்து கீழே விழுவது பதிவாகியுள்ளது.
இது குறித்து போலீசார் பேசுகையில் ‘அபிஷேக் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்தனர். இறந்த அபிஷேக்கை குற்றம்சாட்டப்படுபவரே மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். எனினும் அவர் உயிரிழந்த செய்தி அறிந்தவுடன் தலைமறிவாகியுளார் .உயிரிழந்த அபிஷேக் சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர், அவர் தொடர்ந்து டயாலிசிஸ் செய்து வந்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அபிஷேக், மோஹாலியில் உள்ள ஐஐஎஸ்இஆரில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்துள்ளார். அவர் மோஹாலில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.” என்று தெரிவித்தனர் .
வழக்கு விபரம் :
அபிஷேக் மரணத்தை தொடர்ந்து , மோஹாலி காவல் நிலையம் பிரிவு – 2 காவல்நிலைய ஆய்வாளர், “குற்றவாளி மோன்டி மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 105-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணிகள் நடந்து வருகின்றன.” என்று தெரிவித்தனர் .