சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு புதுச்சேரி கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி மற்றும் மற்றும் அரசியல் தலைவர்கள் பல்வேறு தரப்பினர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவரும், தேமுதிக கட்சி தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் உடல்நிலை குறைவால் காரணமாக காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. வாழ்நாளில் இன்னும் பல உயரங்களை தொட்டியிருக்க வேண்டியவர். அவரது இறப்பு அரசியல் களத்திற்கும், திரையுலகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரழிப்பாகும். இவரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் மறைவு செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது. தனது திரைப்படங்கள் மூலம் புரட்சிகரமான கருத்துகளையும், நாட்டுப்பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த். தனக்கு சரி என்று பட்டதை தைரியமாக வெளிப்படையாக சொல்லும் போக்கு எப்போதும் உண்மையில் பக்கம் நிற்கும் மனிதராகவே அவரே உலகிற்கு அடையாளப்படுத்தி உள்ளது. அவரது இறப்பு திரை துறையிலும், அரசியல் களத்திலும் ஈடு செய்ய முடியாத ஒன்றாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், ரசிகர்களுக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வர்த்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த மன வருத்தமும், வேதனையும் அடைந்தேன். கார்கில் போரின் போது திரை உலகினரை ஒன்று கூட்டி மாபெரும் நிதியினை திரட்டி தேசத்திற்கு துணை நின்ற பெருமைக்குரியவர். அவரது இறப்பு திரை உலகத்தினருக்கும், அவரது கட்சி தொண்டர்களுக்கும் பேரிழப்பாகும். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை நெஞ்சுருகி வேண்டுகிறேன். தமிழ் மக்களின் அன்பை கவர்ந்த விஜய்காந்தின் கலை சேவையை பாராட்டி கலைஞர் அவர்கள் இவருக்கு புரட்சி கலைஞர் என்னும் பட்டத்தை வழங்கி கௌரவித்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை தருகிறது. அவரது மறைவு தமிழகத்திற்கும், திரையுலகத்திற்கும் பேரிழப்பாகும். மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் சுபாவம் கொண்டவர். தமிழ் மொழியின் மீது அளவு கடந்த பற்று கொண்டவர் நல்ல மனிதராக திரைப்பட உலகில் பெயர் எடுத்தவர். விஜயகாந்தின் மறைவுக்கு அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சி தொண்டர்களுக்கும் புதுச்சேரி மாநில அதிமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

புரட்சி கலைஞர் என்றும் கேப்டன் என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்பு சகோதரர் விஜயகாந்த். தேசபக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர். தனது திரைப்பட கதாபாத்திரங்கள் மூலம் பொதுமக்களுக்கும் மாணவர்கள் இளைஞர்கள் பெண்களுக்கு பல்வேறு நல்ல கருத்துக்களை எடுத்துச் சொன்னார். அன்னாரது இழப்பு தமிழக மக்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகப்பெரிய இழப்பாகம் இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரியில் உள்ள அரசியல் தலைவர்கள், சமூக அமைப்பினர், தேமுதிக நிர்வாகிகள், நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விஜயகாந்த் மறைவையொட்டி புதுவையில் உள்ள அனைத்து சினிமா தியேட்டர்களிலும் நேற்று நண்பகல் 12 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டனர்.