பழைய பைக்கை புதுப்பித்து – தொட்டு ரசித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி..!

2 Min Read

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீவிர பைக் பிரியர்.ஆரம்பகாலத்தில் அரசியல் பணிகளுக்கு தன்னுடைய யமஹா பைக்கில் தான் அதிகம் செல்வார். இந்த நிலையில், அவரது பைக் 6 மாதங்களுக்கு முன் புதுப்பிக்கப்பட சென்னை கொண்டு செல்லப்பட்டது.

- Advertisement -
Ad imageAd image

இந்த நிலையில் அந்த பைக் சர்வீஸ் முடிந்து இன்று கொண்டு வரப்பட்டது. புத்தம் புது பொலிவுடன் காணப்பட்ட தனது பைக்கை முதல்வர் ஆசையுடன் தொட்டு பார்த்து ரசித்தார். இது குறித்து காணலாம்.

பழைய பைக்கை புதுப்பித்து – தொட்டு ரசித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

பழைய பைக்கை புதுப்பித்து இயக்கி முதல்வர் நேற்று பார்வையிட்ட வீடியோ இணையதளத்தில் வைரலாகிறது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இருசக்கர வாகன பிரியர். அவர் சொந்தமாக ஆர்.எக்ஸ் 100 என இருசக்கர வாகன வைத்துள்ளார்.

அப்போது கல்லூரி படிப்பு காலம் முதலே இந்த பைக்கில் தான் வலம் வருவார். பின்னர் எம்எல்ஏவாகி வேளாண் துறை அமைச்சர், முதல்வர், எதிர்கட்சி தலைவராக இருந்த போதும், அவர் தனது இருசக்கர வாகனத்தில் தொகுதி உள்பட பல இடங்களுக்கு செல்வார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

மேலும் பிறந்தநாளின் போதும், புத்தாண்டு தினத்திலும் தனது பைக்கிலேயே கோயிலுக்கு சென்று வழிபடுவார். அதேபோல் தேர்தல்களில் வாக்களிக்க செல்லும் போதும், வாக்கு சாவடிக்கு தனது பைக்கிலேயே செல்வார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக முதல்வர் தனது பைக்கை பயன்படுத்தவில்லை. இதனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பைக் புதுப்பிக்க சென்னைக்கு அனுப்பி வைத்தார். புதுப்பிக்கப்பட்ட பைக்கை முதல்வர் ரங்கசாமி வீட்டுக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.


பழைய பைக்கை புதுப்பித்து – தொட்டு ரசித்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புத்தம்புது பொலிவுடன் வந்து இறங்கிய தனது இருசக்கர வாகனத்தை முதல்வர் ரங்கசாமி தொட்டு பார்த்து ரசித்தார். உதைத்து ஸ்டார்ட் செய்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share This Article
Leave a review